TamilSaaga

நல்லபடியாக முடியவிருந்த சித்திரை தேர் திருவிழா.. கண்ணிமைக்கும் நேரத்தில் தேரின் மீது பாய்ந்த மின்சாரம் – 10 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலி

தற்போது நடந்து வரும் இந்த சித்திரை மாதத்தில் பல கோவில்களில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் நடந்த சித்திரை திருவிழா பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.

தஞ்சாவூரில் உள்ள களிமேடு பகுதியில் உள்ளது தான் பழமையான அப்பர் கோவில், இங்கு நேற்று இரவு நடந்த 94வது சித்திரை திருவிழாவில் தான் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேரத்தில் அனைத்து தெருக்கள் வழியாக தேர் பவனி சென்றுள்ளது.

தேர் அனைத்து தெருக்களுக்கும் சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பிய நிலையில் மேலே இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசியுள்ளது. இதில் தேர் முழுக்க மின்சாரம் பாய்ந்ததால் தேரின் மேல் மற்றும் அருகில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிங்கப்பூர் Woodlands சாலை.. Liftக்குள் சிக்கிய திக் திக் நிமிடங்கள்.. கடைசிவரை லிப்ட் வேலைசெய்யாததால் மூவரை கயிறு கட்டி மீட்ட SCDF

இரவு நேரம் மழை பெய்து தெரு முழுக்க நீர் தேங்கி இருந்ததால் பலர் தேரின் அருகில் செல்லாதது பெரும் உயிரிழப்பை தவிர்த்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

HD லைனில் உரசிய பிறகு தேர் தீ பற்றி எறிந்த நிலையில் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தஞ்சை பகுதி தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இதில் தேர் முற்றிலும் எரிந்து நாசமானது, தஞ்சையில் திருவிழாவின்போது தேரில் மின்சாரம் தாக்கி பலர் உயிரிழந்தது தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts