TamilSaaga

60 வருட “அசைக்க முடியா” நட்பு.. சிங்கப்பூரில் தன் தோழியின் மடியிலேயே சந்தோஷமாய் உயிரை விட்ட தோழி – நட்புன்னா இப்படி இருக்கணும்!

நண்பர்கள் பலர் நம் வாழ்வில் வருவார்கள், போவார்கள். ஆனால், சிலருடைய நட்பு மட்டுமே நம் வாழ்வில் நீடித்திருக்கும். அவர்களுடனான நினைவுகள் மட்டுமே நம் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கும். நமது சிங்கப்பூரில் அப்படி ஒரு நட்பைத் தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

ஆம்! சிங்கப்பூரில் இரண்டு தோழிகள் 60 வருடங்களாக இணைபிரியாத நட்பை கொண்டிருந்தனர். ஒருவரின் பெயர் பீபி மொஹிந்தர் கவுர் தலம்நங்கள் (Bibi Mohinder Kaur Dalamnangal). மற்றவரின் பெயர் Oh Swee Kim.

இவர்கள் இருவரின் நட்பு குறித்து பீபி மொஹிந்தரின் பேத்தி Heerea Rikhraj உருக்கமுடன் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், எனது பாட்டியும் ஓ ஸ்வீ கிம்மும் முதன்முதலாக பள்ளியில் தான் சந்தித்தனர். மிடில் ரோடில் உள்ள குயின் ஸ்ட்ரீட்டில் தான் அந்த பள்ளி இருந்தது. ஆனால், பள்ளியின் பெயர் எனக்கு நினைவில்லை.

இருவருக்குமே அவ்வளவாக படிப்பு வரவில்லை. அடிக்கடி வகுப்பில் தோல்வி அடைந்தனர்.

மேலும் படிக்க – “என் மகன் உயிரோடு திரும்ப வேண்டும்; யுவர் ஹானர்” – 11 மணி நேரம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் போராடிய நாகேந்திரன் தாயார் – தூக்கு உறுதி!

ஒரு முறை, என் பாட்டி மற்றொரு நண்பருக்கு காதல் கடிதம் எழுத உதவினார். ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவெனில், விஷயம் வெளியே தெரிந்த பிறகு சிக்கியது என் பாட்டில்ல.. அவரது நண்பர் Oh Swee Kim தான். அதேபோல், Oh Swee-ன் திருமணத்தில் மணப்பெண் தோழி என் பாட்டி தான். தனது வாழ்வின் ஒவ்வொரு முக்கிய நகர்வுகளில் எனது பாட்டி ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்று Oh Swee விரும்பினார்.

ஆனால், அதன் பிறகு இருவரும் தங்களது குடும்பத்தை கவனிக்கும் பொறுப்புகளில் மூழ்கியதால், மெல்ல மெல்ல தங்கள் நட்பை இழந்தனர். 15 வருடங்களுக்கு முன்பு, Oh Swee கணவர் உயிரிழந்த பிறகு, அவர் தனிமையில் மன உளைச்சலுக்கு ஆளானார். பிறகு மீண்டும் என் பாட்டியை தேட ஆரம்பித்தார்.

Photo Courtesy: Heerea Righraj & Mothership

அப்போது எனது பாட்டி கனடாவில் இருந்தார். பிறகு அவர் சிங்கப்பூர் திரும்பியவுடன் இருவரின் நட்பு படலம் பல வருடங்களுக்கு மீண்டும் தொடங்கியது. அதன் பிறகு இருவரும் பிரியவே இல்லை.

இந்நிலையில், கடந்த நவம்பர் 2021ம் ஆண்டு, தனது 88வது வயதில் எனது பாட்டி அவரது தோழியின் மடியிலேயே உயிரிழந்தார். அதனை Oh Swee-யால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போது, தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் Oh தனது தோழியின் நினைவுகளை தினம் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார் என்று முடித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts