TamilSaaga

சிங்கப்பூரில் 1 மாதத்திற்கு வேற லெவல் திருவிழா.. சிங்கை அரசின் முடிவால் உலகெங்கும் அதிரப்போகும் தமிழின் “கெத்து”

சிங்கப்பூரில் பல மொழிகள் பேசும் இந்தியர்கள் வசிக்கின்றனர். எனினும், சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய மொழி தமிழ் மட்டும் தான். சமீபத்திய கணக்கின்படி சிங்கப்பூரர்களில் 3.1% பேர் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தமிழை ஆட்சிமொழியாக கொண்ட மூன்று நாடுகளில் சிங்கபூரும் ஒன்று, மற்றவை முறையே இந்தியா மற்றும் இலங்கையாகும்.

அப்படிப்பட்ட தமிழ் மொழியை கொண்டாடவும் அதனை ஊக்குவிக்கவும் ஒரு மாத திருவிழாவுக்கு சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Upper Changi பகுதி.. கண்மூடித்தனமாக சாலையை கடக்க முயன்ற நபர்.. துரிதமாக செயல்பட்ட ஓட்டுநரால் தடுக்கப்பட்ட விபத்து – வெளியான Video

ஒரு மாத காலத்திற்கு, தமிழின் தொன்மையை பறைசாற்றும் நாடகங்கள், இசை மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்த அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், பெருந்தொற்று அச்சம் காரணமாக இவை பெரும்பாலும் ‘Online’ Mode-ல் நடத்தப்பட உள்ளன.

இது குறித்து, சிங்கப்பூர் அரசின் தமிழ் மொழி கவுன்சில் தலைவர் மனோகரன் பேசுகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் தமிழை கொண்டாட வேண்டும் என்பதே நமது நோக்கம். தங்கள் தினசரி வாழ்க்கையில் தமிழ் மொழி பேசுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த விழாக்களில் பங்கேற்கும் போது தலைமுறைகளை தாண்டி தமிழ் மொழி வாழும்” என்று தெரிவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts