இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நிலவும் போரின் காரணமாக ஏராளமான குடிமக்கள் இஸ்ரேலில் உள்ள காசா நகரில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் ஏற்கனவே நிதி உதவி செய்வதாக அறிவித்திருந்தது.இந்நிலையில் தற்பொழுது ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்ப முடிவெடுத்துள்ளது.
சிங்கப்பூரில் இயங்கும் மனிதநேய அமைப்பானது சுமார் ஐந்து டன் எடையுள்ள நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான உயிர்ச்சத்து மாத்திரைகள், குளிரை தாங்கும் போர்வைகள் ,தண்ணீரை சேமித்து வைப்பதற்கான பெரிய கொள்கலன்கள் ஆகியவை அடங்கும்.
100 பேர் அடங்கிய மாபெரும் குழுவானது வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி பொருட்களை அனுப்பும் பணியில் ஈடுபடும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.முதலில் எகிப்து தலைநகருக்கு அந்த பொருட்கள் விமான மூலம் அனுப்பி வைக்கப்படும் என மனிதநேய அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. நிவாரண பொருட்களை வழங்குவதற்கான திட்டத்தில் நன்கு பயிற்சி பெற்ற வல்லுநர்கள் விமானத்தில் சென்று நிவாரண பொருட்களை பகிர்ந்து அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது