TamilSaaga

கூகுள் மேப்பை நம்பி போனதால் வந்த சோகம்.. வயலுக்குள் சென்று சிக்கிய கார் – இறுதியில் என்ன தான் ஆச்சு?

முன்பெல்லாம் ஒரு தெரியாத பாதையில் செல்ல வேண்டும் என்றால் அப்பகுதியில் உள்ள நபர்களை கேட்டு கேட்டுத்தான் சென்றுகொண்டிருந்தோம். ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லாமே Map தான். தெரியாத ஒரு இடத்திற்கு செல்லுமுன் Google Mapஐ தட்டினால் போதும் டிசைன் டிசைனாக பல ரூட்களில் நம்மால் செல்லமுடியும்.

ஆனால் இந்த அறிவியல் சில சமயங்களில் நம் காலை வருவதும் உண்டு என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. அந்த வகையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திரூர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார். புதுக்குளம் என்ற பகுதியை நோக்கி தனது பயணம் துவங்கிய அந்த குடும்பம் google map உதவியுடன் சென்றுள்ளனர்.

சிங்கப்பூரில் Cleaner வேலை பார்த்து சேர்த்த பணம்.. 50 வருஷ சேமிப்பை திருடிட்டாங்க – மோசடி ஆசாமிகளிடம் 30 லட்சம் வெள்ளியை இழந்த முதியவர்

ஒரு கட்டத்தில் பாலசித்ரா மலைப்பாதை வழியாக சென்றால் சீக்கிரம் அந்த இடத்தை அடைந்துவிடலாம் இன்றி map காட்ட அவர்களும் இரவு நேரத்தில் அந்த மலை பாதை வழியாக பயணித்துள்ளனர். இரவு நேரம் அதுவும் மலைப் பாதை என்பதால் தட்டுத்தடுமாறி அவர் வாகனத்தை இயக்கியுள்ளார்.

இறுதியில் அந்த பாதை முடியும் இடத்தில் இருந்த வயலில் சென்று வண்டி நிற்க, அதில் வாகனம் மாட்டிக்கொண்டது. அந்த நபர் எவ்வளவோ முயன்றும் அவரால் காரை சேற்றிலிருந்து மீட்க முடியவில்லை. இறுதியில் இரவு முழுதும் குடும்பத்துடன் அந்த பகுதியில் உதவிக்கு ஆள் இல்லாமல் அங்கேயே காத்திருந்துள்ளனர்.

இறுதியில் பொழுது விடியும் நேரத்தில் அந்த பகுதிக்கு அருகாமையில் இருந்த மக்கள் உதவிக்கு வர அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த காரை கயிறு கட்டி இழுத்து மீட்டுள்ளனர். உண்மையில் விஞ்ஞானத்தை முழுவதுமாக நம்புவது இதுபோன்ற சில சமயங்களில் சங்கடங்களை ஏற்படுத்திவிடுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts