TamilSaaga

சிங்கப்பூரின் SSG நிறுவனம்.. 39 மில்லியனை சுருட்டிய கணவன் மனைவி : 17 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூரில் உள்ள பிரபல SkillsFuture Singapore நிறுவனத்திடம் சுமார் 39.9 மில்லியன் டாலர் மானியத்தில் மோசடி செய்த கும்பலின் “முக்கிய உறுப்பினர்களாக” இருந்த தம்பதியினர், தாங்கள் செய்த பல குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 16) சிறையில் அடைக்கப்பட்டனர். போலி ஆவணங்கள் மற்றும் பணமோசடி உள்ளிட்ட பல குற்றங்களை ஒப்புக்கொண்ட கணவன் என்ஜி செங் க்வீ மற்றும் மனைவி லீ லை லெங் கடந்த ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.

பல மாதங்களாக வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது கணவன் என்ஜி செங் க்வீ-க்கு 17 ஆண்டுகளுக்கும் மனைவி லீ லை லெங்-கிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜோடி ஒரு கிரிமினல் சிண்டிகேட்டின் ஒரு பகுதியாக இருந்தது. சிங்கப்பூரில் ஒன்பது செயலற்ற வணிக நிறுவனங்களைப் பயன்படுத்தி ஆறு மாதங்களில் SSG மானியப் பணத்தை மோசடி செய்துள்ளது.

கடந்த ஜனவரி 2017 மற்றும் ஜூலை 2017க்கு இடையில், என்ஜி, லீ மற்றும் அந்த மோசடி கும்பலின் மற்ற உறுப்பினர்கள் ஒன்பது செயலற்ற நிறுவனங்களை விண்ணப்பதாரர் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி வழங்குநர்களாக SSG உடன் பதிவு செய்ய சதி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

என்ஜி, லீ மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் Singpass உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி, அவர்கள் சிபிஎஃப் அறிக்கைகள், பயன்பாட்டு பில்கள் மற்றும் வாடகை பில்கள் உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts