TamilSaaga

சிங்கப்பூரில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளி : “தந்தையை இழந்து தவிக்கும் மூன்று பெண் குழந்தைகள்”

சிங்கப்பூர் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டிலிருந்து வந்து தனது குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் மரணம் என்பது துயரத்தின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு சென்றுள்ளார் சிங்கப்பூரில் சில நாட்களுக்கு முன்பு இறந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி இஸ்லாம் ரொபியூல்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் போலீஸ் நடத்திய அதிரடி ரைடு

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான Its Raining Rain Coats நிறுவனம் தனது முகநூல் பதிவில் இந்த சமத்துவம் குறித்து இறந்த அந்த தொழிலாளியின் பெயர் இஸ்லாம் ரொபியூல் என்றும் உறுதி செய்துள்ளது. அந்த தொழிலாளியை இழந்து அவரது மனைவி மற்றும் 3 பெண் பிள்ளைகள் தவித்து வருவதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. “நாங்கள் அவர்களுக்காக நிதி திரட்டலை நடத்தவில்லை, ஏனெனில் எங்களால் தற்போது அது முடியவில்லை மற்றும் இறந்த தொழிலாளி WICA செயல்முறையின் மூலம் அவரது நிலுவைத் தொகையைப் பெறுவார் என்று நம்புகிறோம்” என்றும் அந்த பதிவில் கூறியுள்ளது இந்த தொண்டு நிறுவனம்.

சிங்கப்பூரின் பெடோக் நீர்த்தேக்கப் பூங்காவில் உள்ள ஒரு பணித்தளத்தில், ஹோம் டீம் நேஷனல் சர்வீமென்ஸ் (NSmen)க்கான கிளப்ஹவுஸ் கட்டப்பட்டு வரும் இடத்தில் இந்த மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 900 பெடோக் நார்த் ரோட்டில் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்கு எச்சரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சின் லீ கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளி சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் அம்மாவட்ட அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts