TamilSaaga

தென் கிழக்கு ஆசியாவை குறிவைக்கும் சிங்கப்பூரின் “வர்த்தகப் புலி” – பெரும் சக்தி வாய்ந்த வங்கியாக உருவெடுக்கும் UOB

சிங்கப்பூரின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் வீ சோ யா (wee cho yaw). சிங்கப்பூரில் உள்ள யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி (UOB) மற்றும் யுனைடெட் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் (UIC) ஆகியவற்றின் தலைவர் இவர் தான்.

இதையும் படியுங்கள் : “உட்லண்ட்ஸ் Super Fast ரயில் நிலையம்” : பொதுஇடத்தில் ஓய்வெடுத்த வெளிநாட்டு தொழிலாளர்கள் – என்ன காரணம்?

இந்நிலையில், வீ சோ யாவின் யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி, அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Citi வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள Citigroup இன் consumer banking businessகளின் விஸ்தரிப்பை மேற்கொள்ள UOB ஒப்புக் கொண்டுள்ளது.

அதாவது Citi வங்கி தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனது விரிவாக்கத்தை துரிதப்படுத்துவதால் இந்த வணிக ஒப்பந்தம் நடைபெற்றது. UOB வங்கி அதற்கு தற்போது கைக்கொடுத்துள்ளது.

இதன் கொள்முதல் விலை சுமார் S$4.9 பில்லியன் ($3.6 பில்லியன்) ஆகும். இதில் $915 மில்லியன் பிரீமியம் அடங்கும், கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி வணிகத்தின் மொத்த நிகர சொத்து மதிப்பு S$4 பில்லியனுக்கு அதிகமாகும்.

2022 ஆம் ஆண்டின் நடுவில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு ஒப்பந்தம் முடிவடையும் போது வணிகத்தின் என்ஏவியின் அடிப்படையில் விலைக் குறி சரிசெய்யப்படும்.

“இந்த மெகா ஒப்பந்தம் UOB குழுமத்தின் வணிகத்தை மேம்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கலவையை உருவாக்கும்,” என்று UOB துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வீ ஈ சியோங் (Wee Ee Cheong) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த Wee Ee Cheong வேற யாருமில்லை. வீ சோ யாவின் மூத்த மகன் தான்.

இந்த ஒப்பந்ததிற்கு பின்னால் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. அதாவது, சிட்டிகுரூப் கடந்த மாதம் தனது பிலிப்பைன்ஸ் நுகர்வோர் வங்கி வணிகத்தை யூனியன் பேங்க் ஆஃப் பிலிப்பைன்ஸுக்கு விற்க ஒப்புக்கொண்டதை அடுத்து நடந்துள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் பிலிப்பைன்ஸ் அந்நாட்டின் “மெகா” குடும்பமான Aboitiz-க்கு சொந்தமானது. அதாவது, Jon Ramon Melendez Aboitiz எனும் பிலிப்பைன்ஸின் பெரும் பணக்காரரின் Aboitiz குழுமாத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கியாகும்.

Citigroup ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 13 சந்தைகளில் அதன் நுகர்வோர் வங்கி உரிமைகளை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளது.

“இந்த செயல்களின் மூலம் எங்கள் வணிகத்தை மையப்படுத்துவது, ஆசிய பசிபிக் முழுவதும் உள்ள எங்கள் பகுதிகளில் கூடுதல் முதலீட்டை எளிதாக்கும்.மேலும் இது சிட்டிக்கு உகந்த வருமானத்தை ஈட்டுகிறது,”என்று சிட்டி ஆசியா பசிபிக் CEO கூறியிருக்கிறார்.

இந்த கையகப்படுத்தல் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள UOB இன் முக்கிய சந்தைகளில் 2.4 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. அதாவது, இந்த ஒப்பந்தத்தின் மூலம் தென் கிழக்கு ஆசியாவில் தனது சாம்ராஜ்ஜியத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாக வீ சோ யா-ல் பதிக்க முடியும். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒரு சிங்கப்பூர் நிறுவனம் தென் கிழக்கு ஆசியாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

இதையும் படியுங்கள் : Big 7 Travel வெளியிட்ட உலகளாவிய பட்டியல் : Hashtag-கில் அசத்தி முதலிடம் பிடித்த நம்ம சிங்கப்பூர்

UOB தலைமை நிர்வாக அதிகாரி வீ-யின் வார்த்தைகளும் இதைத் தான் சொல்கின்றன. “UOB வங்கி தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட கால வளத்தை நம்புகிறது. அங்கு மேலும் வளர்ச்சியடைவதற்கான சரியான வாய்ப்புகளைத் தேடி நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்,” என்று கூறியிருக்கிறார்.

$6.8 பில்லியன் நிகர மதிப்புடன், ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட சிங்கப்பூரின் 50 பணக்காரர்களின் பட்டியலில் வீ 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts