TamilSaaga

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிரடி : கட்டுக்கட்டாக சிக்கிய பெட்டிகள், இரு “வெளிநாட்டு நபர்கள்” கைது – உள்ளே இருந்தது என்ன?

சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 23) நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த அமலாக்க நடவடிக்கையின்போது 1,600க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. மார்சிலிங் கிரசென்ட் கனரக வாகனப் பூங்காவைச் சுற்றி இந்த நடவடிக்கை நடந்ததாக சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

“என் மாப்பிள்ளையை காணும்” : சிங்கப்பூர் பெண்ணுக்கு இருமுறை நின்று போன கல்யாணம் – அவ்வளவு துரதிர்ஷ்டசாலியா?

“சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு டிரக்கில் இருந்து சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வேனுக்கு கருப்பு குப்பைப் பைகளில் மூடப்பட்ட பொருட்களை இருவர் மாற்றிக்கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்” என்று காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. உடனே அவர்கள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கையாள்வதாக அதிகாரிகள் சந்தேகித்தனர் மற்றும் சோதனை செய்ய மேற்கொண்டு அவர்களை நோக்கி சென்றனர்.

அப்போது அவர்களிடம் 1,636 அட்டைப்பெட்டிகள் மற்றும் 80 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சிக்கிய அந்த ஆண்களின் குடியிருப்பு ஒன்றில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மற்றொரு அட்டைப்பெட்டி மற்றும் ஆறு சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. 32 மற்றும் 42 வயதுடைய சீன நாட்டு பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

நாங்களே கஷ்டத்துல இருக்கோம்; இதுல வெளிநாட்டு ஊழியர்களுக்கு எப்படி அதிக Basic Pay கொடுக்க முடியும்? – சிங்கப்பூரில் முதலாளிகள் “ஆவேசம்”

“மொத்த வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை முறையே S$1,40,390 மற்றும் S$11,170” என சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. அந்த இருவருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts