TamilSaaga

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் சுகன்யான் திட்டம்…. அடுத்த சாதனையை கெத்தாக பதிவு செய்த இந்தியா!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக இந்தியா நடத்தி சாதனை புரிந்துள்ளது. இஸ்ரோவின் தலைவர் சோமநாத் அவர்கள் இதனை தற்பொழுது உறுதிப்படுத்தி உள்ளார். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள நிலையில் இந்த சாதனையை வெற்றிகரமாக நடத்துவதற்காக சுகன்யான் என பெயரிடப்பட்ட இது திட்டமானது 2014 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சோதனை முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுவட்ட பாதைக்கு இரண்டு முதல் மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பி மூன்று நாள் ஆய்வுக்கு பின்னர் பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே சுகன்யான் திட்டத்தின் நோக்கம் ஆகும்.இதன் முதல் கட்ட சோதனையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ முதலில் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் விண்கலம் மேலே எழும்புவதில் சிக்கல் இருந்த நிலையில் சோதனை ஓட்டம் ஆனது ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த ஆய்வுக்குப் பிறகு விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை ஒட்டி இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

Related posts