TamilSaaga

சிங்கப்பூரில் விரைவில் வேலை கிடைக்க உதவும் “Single line drawing”.. வொர்க் பெர்மிட்டில் இருப்பவர்களுக்கு S-Pass! “ஆல் ரவுண்டராக” இருந்தால் “டபுள்” சம்பளம்!

சிங்கப்பூரில் எலக்ட்ரீஷியன்களுக்கு எப்போதுமே ஒரு டிமாண்ட் உண்டு. அவர்கள் Freshers-களாக இருந்தாலும் சரி… அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. அவரவரின் தகுதிக்கேற்ப எலக்ட்ரிக்கல் துறையில் பல்வேறு பிரிவுகளில் வேலை பெற முடியும். அதுகுறித்த முழு விவரங்களை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் துறையில் வேலைக்கு வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. நீங்கள், B.E முடித்திருக்கும் பட்சத்தில் S pass-ல் வரலாம். நல்ல சம்பளம் கிடைக்கும். ஆனால், இதில் உள்ள ஒரே சிக்கல், ஏஜெண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டணம். சிலர் நியாயமாக கட்டணம் வாங்கினாலும், பலர் கணக்கே இல்லாமல் S-Pass-க்கு பணம் வாங்குகிறார்கள். இதனால், படித்த இளைஞர்கள் S-Pass அப்ளை செய்ய தயங்குகின்றனர். (இன்றைய சூழலில், சிங்கை அரசு S-Pass கொடுப்பதை கணிசமாக குறைத்துவிட்டது வேறு விஷயம்!)

ஸோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் கூட, எலக்ட்ரிக்கல் துறையில் சிங்கப்பூர் வர முன்னுரிமை கொடுப்பது Skilled Test-க்கு தான். இதில் ஊதியம் குறைவு என்றாலும், ஏஜெண்டுக்கு கொடுக்க வேண்டிய கட்டணமும், S-Pass உடன் ஒப்பிடுகையில் குறைவு தான். எனினும், டெஸ்ட் அடித்து வொர்க் பெர்மிட்டில் சிங்கப்பூர் வந்தாலும், சில வருடங்களில் உங்களது படிப்பு மற்றும் பணி அனுபவத்தை வைத்து S-pass-க்கு நீங்கள் மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எலக்ட்ரீஷியன் துறை வகைகள்
கட்டுமானத் துறை எலக்ட்ரீஷியன்
பராமரிப்புத் துறை எலக்ட்ரீஷியன்
தொழில்துறை எலக்ட்ரீஷியன்
மரைன் எலக்ட்ரீஷியன்
பேனல் பில்டர்

எலக்ட்ரிக்கல் துறையை பொறுத்தவரை 3 Phase வரை ஒயரிங் வேலைகள் அதிக அளவில் இருக்கும். அதுமட்டுமின்றி, பைப் வேலை, மெட்டல் வேலை, Single Line Drawing, பராமரிப்பு பணியில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வது என்று பல்வேறு பிரிவுகளில் ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலை.. ஏஜெண்ட்டுக்கு பணம் கொடுக்க போறீங்களா? ஒரு நிமிஷம் வெயிட்.. சிங்கை அரசே கொடுக்கும் “Official” லிஸ்ட்!

சம்பளம் எவ்வளவு?

சம்பளத்தை பொறுத்தவரை வொர்க் பெர்மிட்டில் செல்லும் எலக்ட்ரிஷியனுக்கு ஒரு நாளைக்கு $23-லிருந்து $26 டாலர்கள் வரை கொடுக்கப்படலாம். இது அந்தந்த கம்பெனியின் முடிவை பொறுத்தது. சிலர் இன்னும் கூட குறைவாக வாங்கலாம். இன்னும் நாம் சொன்னதை விட அதிகமாகவும் வாங்கலாம்.

அதேசமயம், ஓனர்களை பொறுத்தவரை எலக்ட்ரீசியன் என்றால், எலக்ட்ரிக்கல் வேலை மட்டுமின்றி, வேறு சில தகுதிகளும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதாவது, எலக்ட்ரிக்கல் வேலை தவிர, டிரைவிங் தெரிந்திருக்க வேண்டும், லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும், கம்ப்யூட்டரில் பேஸிக் தெரிந்திருக்க வேண்டும் என்று பல திறமைகளை எதிர்பார்ப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மட்டுமின்றி, சமயத்தில் அம்பயரிங் கூட பண்ண வேண்டும் என்று சிங்கப்பூர் ஓனர்கள் எதிர்பார்ப்பார்கள். ஸோ, உங்கள் “ஆல் ரவுண்டர்” திறமைகளை பொறுத்து உங்கள் சம்பளமும் வேறுபடும்.

இப்படி பல திறமைகள் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஒரு நாளைக்கு $40 டாலர்கள் கூட கிடைக்க வாய்ப்புண்டு என்கின்றனர் விபரமறிந்தவர்கள். இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், Single Line Drawing தெரிந்தவர்களுக்கு வேலை கிடைப்பதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் கூறுகின்றனர். இவர்கள் S-Pass மூலமாகவே சிங்கப்பூர் வரலாம் என்கின்றனர்.

அதுமட்டுமின்றி, எலக்ட்ரிக்கலில் கட்டட பராமரிப்பில் உயர் பதவிக்கு செல்ல அங்கு நடத்தப்படும் F&M கோர்ஸை முடிக்கும் பட்சத்தில், வொர்க் பெர்மிட்டில் இருந்து S-Pass-க்கு மாறலாம் என்றும் கூறுகின்றனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts