TamilSaaga

பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்த ஆதிபராசக்தி கோவிலின் பங்காரு அடிகளார் இறைவனடி சேர்ந்தார்!

ஆண்கள் பக்தி பரவசத்துடன் இடத்திற்கு ஒருமுறை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கம் என்றால் பெண்களுக்கான சபரிமலை என்பது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆகும். தமிழ்நாட்டில் பிரசித்தி வாய்ந்த இந்தக் கோவில் அறக்கட்டளையானது பங்காரு அடிகளார் அவர்களால் 1970 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. பெண்களும் கருவறைக்குள் நுழையலாம் என்று புது சிறப்பம்சத்தை கொண்டு வந்ததன் மூலம் இந்தக் கோவில் பிரபலமானது.

இந்தக் கோயிலுக்கு மாதவிடாய் காலத்திலும் பெண்கள் வந்து அம்மனை வழிபடலாம் என்பது தனித்துவமாகும்.இதற்காகவே வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் சேலை அணிந்து ஆதிபராசக்தி அம்மனை வழிபடுவதுண்டு. இந்த காலகட்டங்களில் கோவில் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். அந்த அளவிற்கு இந்த கோயிலை பிரசித்தி பெற செய்த பெருமை திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கே சேரும். மேலும் ஆதிபராசக்தி அம்மன் அறக்கட்டளையின் பெயரில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி போன்றவற்றை துவக்கி சுற்றிலும் உள்ள கிராம மக்களுக்கு கல்வி சேவை அழித்து வருகின்றார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது உடல் செங்கல்பட்டில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா முதலிய ஊர்களில் இருந்தும் மக்கள் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related posts