TamilSaaga

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிட்ட தொகையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்…. அடேங்கப்பா இவ்வளவு தொகையா?

சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு. தர்மன் சண்முக ரத்தினம் சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் தேர்தலுக்காக அதிபர்கள் செலவிட்ட தொகையானது மக்கள புரிதலுக்காக ஆன்லைனில், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என வெளியாகி உள்ளன.

இதன்படி திரு தர்மன் அவர்கள் 738717 வெள்ளி செலவு செய்துள்ளார் என தெரியவந்தது. மேலும் போட்டியிட்ட கோக் சோங் என்ற வேட்பாளர் 312131 வெள்ளி செலவு செய்துள்ளதாகவும், மேலும் டான் கின் லியோன் என்ற வேட்பாளர் 71366 வெள்ளி செலவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்களில் திரு தர்மன் அவர்கள்தான் அதிகபட்சமாக செலவு செய்துள்ளார்கள் வந்துள்ளது. சிங்கப்பூர் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி தேர்தல் முடிந்த 31 நாட்களுக்குள் பிரச்சார செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.அதன் அடிப்படையில் தேர்தலில் தொண்டாற்றிய ஊழியர்களுக்கு போக்குவரத்து ,உணவு முதலிய செலவுகளுக்காக பணம் செலவிடப்பட்டுள்ளது என வேட்பாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தர்மன் அவர்கள் செலவிற்காக 800000 வெள்ளி நன்கொடையாக பெற்றுள்ளதால் பெற்ற நன்கொடையை விட தேர்தல் செலவுகள் குறைவாக இருந்த நிலையில் மீதம் உள்ள தொகையானது கொடையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்படும் என திரு தர்மன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூரை பொறுத்தவரை தேர்தல் செலவு கணக்குகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை என்று தெரியவந்துள்ளது.

Related posts