TamilSaaga

நடுத்தர பெண்மணிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் தங்கத்தின் விலை… விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன?

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் காரணமாக தங்கத்தின் விலை ஆனது வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து தற்பொழுது 45280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஆனது ஏற்றம் காண்பதும் இறங்குவதும் வழக்கமாக நடக்கும் விஷயம்தான். தற்பொழுது தங்கத்தின் விலை கிராமிற்கு 6000 தொடுமோ என்ற அச்சத்தில் சராசரி பெண்மணிகள் உள்ளனர். தங்கத்தின் விலை ஆனது கடந்த வாரத்தில் ஒரு பவுன்க்கு 1160 உயர்ந்திருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5660 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது.

போரின் காரணமாக சர்வதேச அளவில் செய்யப்படும் முதலீடுகள் தங்கத்தை நோக்கி ஈர்க்கப்படுவதே விலை உயர்வுக்கு என நிபுணர்ககள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போர் முடியும் வரை தங்கத்தின் விலை ஆனது தொடர்ந்து ஏறு முகத்தில் இருக்கும் என கருத்துக்களை கூறுகின்றனர்.

Related posts