TamilSaaga

Exclusive : சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய தமிழர்கள்?; “ஏகப்பட்ட பணியிடங்கள் காலி” – அரசு நல்ல முடிவு எடுக்குமா?

நமது சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்களும் அதிகம் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இந்நிலையில் இந்த பெருந்தொற்று காலத்தில் வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் உள்பட பலர் சிங்கப்பூரில் வேலையிழந்தனர். இது சிங்கப்பூர் மட்டுமின்றி பல முன்னேறிய நாடுகளிலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிங்கப்பூரில் இருந்து பெரிய அளவிலான மக்கள் குறிப்பாக தமிழர்கள் தாயகம் திரும்பிவருகின்றனர். இதனால் சிங்கப்பூரில் பல துறைகளில் பெரிய அளவில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகையால் சிங்கப்பூர் அரசு மீண்டும் அந்த பணியிடங்களை பூர்த்தி செய்ய பிற நாடுகளில் இருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து பணியாளர்களை சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கும் என்று நம்பப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகுந்த பாதுகாப்போடு தமிழகத்தின் பல பகுதிகளில் தொழிலாளர்கள் திருச்சி விமான நிலையம் மூலம் சிங்கப்பூர் அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் செப்டம்பர் 8ம் தேதி முதல் VTL எனப்படும் சிங்கப்பூரின் Vaccinated Travel Lane திறக்கப்பட உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.

சிங்கப்பூர் அறிமுகம் செய்துள்ள இந்த VTL திட்டம் மூலம் பயண பாதைகளின் கீழ், ஜெர்மனி அல்லது புருனேயிலிருந்து புறப்படும் மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தங்குமிட அறிவிப்பை வழங்காமல் சிங்கப்பூருக்குள் நுழையலாம் அதாவது தனிமைப்படுத்துதல் விதியை செயல்படுத்த தேவையில்லை. இருப்பினும் அவர்களுக்கு பல முறை பெருந்தொற்று ராபிட் சோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் சிங்கப்பூர் பல பிராந்தியங்களுக்கு இந்த VTL சேவை மூலம் மக்கள் மற்றும் தொழிலாளர்களை சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கும் என்று தகவல் வெளியாகி வருகின்றது. சிங்கப்பூரில் தற்போது பல துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் VTL திட்டம் சிங்கப்பூருக்குள் வரவிரும்பும் தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts