TamilSaaga

“10 நிமிடம் Video Call பேச 15,000 ரூபாய்”.. நேரில் சந்திக்கவும் தனி ரேட் – புதிய “ஆப்” தொடங்கி கல்லா கட்டும் நடிகை கிரண்!

தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த “ஜெமினி” படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். ராஜஸ்தானைச் சேர்ந்த கிரண், மெகா ஹிட் படமாக அமைந்த ஜெமினி மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார்.

பிறகு அஜித்துடன் ‘வில்லன்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’ , பிரஷாந்துடன் ‘வின்னர்’ , விஜயகாந்துடன் ‘தென்னவன்’ என்று வரிசையாக முன்னணி ஹீரோ படங்களில் நடித்தார். ரஜினியுடன் ‘பாபா’ படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்து, கை நழுவிப் போனது. இல்லையெனில், சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருப்பார்.

‘திருமலை’ படத்தில் ஒரேயொரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து ஆடியிருப்பார். மற்றபடி விஜய்க்கு ஜோடியாக நடித்ததில்லை. கடைசியாக, சுந்தர்.சி நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தில், ஹீரோயினின் அம்மா ரோலில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க – ஏன் ‘பெரியசாமி ராஜேந்திரன்’ உயிரை பறிகொடுத்தோம்? சிங்கப்பூரில் இந்த வருஷம் மட்டும் 27 ஊழியர்கள் உயிர் போச்சு – குடும்பம் என்ன பாவம் செய்தது?

பட வாய்ப்புகள் பெரிதாக இல்லையென்றாலும், சமூக தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் கிரண். ‘பிக்பாஸ்’ 4வது சீசனில், கிரண் பங்கேற்கிறார் என்ற தகவலும் கசிந்தது. ஆனால், சில காரணங்களால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நடிகை கிரண் தனது நண்பர்களுடன் இணைந்து புதிய Android “ஆப்” ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் தனது புகைப்படங்களை விற்று வருகிறார்.

அதுமட்டுமின்றி, அந்த ஆப் மூலம் அவருடன் ரசிகர்கள் யார் வேண்டுமானாலும் பேசலாமாம். அதாவது, 5 நிமிடம் வீடீயோ காலில் பேச 5000 ரூபாய் முன்பதிவு செய்ய வேண்டுமாம்.

பத்து நிமிடம் வீடியோ கால் பேசுவதற்கு – ரூ.15000 கட்டணமாம். சிங்கப்பூர், மலேசியா என்று வெளிநாடுகளில் இருந்தும் இந்த ஆப் மூலம் பேச முடியுமாம். இந்தியாவில் இருந்து பேசினாலும், வெளிநாடுகளில் இருந்து பேசினாலும் ஒரே கட்டணம் தானாம்.

இதுவரை வெளிவராத அவரது கவர்ச்சி புகைப்படம் வேண்டுமென்றால் – 2000 ரூபாயாம்.

கிரணுடன் 25 நிமிடம் வீடியோ கால் பேச வேண்டும் என்றால் 30,000 ரூபாய் கட்டணமாம்.

அதுமட்டுமின்றி, கிரணை நேரடியாக பார்த்து பேச 1,50,000 கட்டணமாம். இப்படி தனது புதிய ஆப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கிரண், கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் வழங்குகிறாராம்.

ஒருபக்கம் இவரது இந்த ஆப் விமர்சனங்களை சந்தித்தாலும், மறுபக்கம் அந்த வருமானம் மூலம் இவர் செய்யும் நற்காரியங்களும் வரவேற்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts