TamilSaaga

“சிங்கப்பூரில் குழந்தையோடு Taxi-யில் பயணித்த பயணிகள்” : கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர் – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் ஒரு குழந்தை உட்பட பயணிகள் சில பேர் இருந்த டாக்ஸியை மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டை பயன்படுத்தி சேதப்படுத்திய 30 வயது நபர், நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.10 மணியளவில் சோவா சூ காங்கில் உள்ள 804B கீட் ஹாங் க்ளோஸில் ஒரு டாக்ஸியை “அடித்து நொறுக்கும்” நபர் குறித்து தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

“போக்குவரத்தில் ஏற்பட்ட தகராறில் அந்த நபர் டாக்ஸி டிரைவரை எதிர்கொண்டதாகக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று போலீசார் தெரிவித்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் தனது மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டை டாக்ஸியை தாக்க பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டது, அவரின் இந்த நடத்தையால் வாகனத்திற்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. நல்பாய்ப்பாக அந்த வாகனத்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இளைஞர், வாகனத்தை தாக்கும் வீடியோVideo Courtesy Singapore Road Accident FB Page

விரிவான விசாரணைகளின் மூலம் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். நாளை வியாழக்கிழமை அந்த நபர் மீது ஒரு “மோசமான செயல் செய்ததாக” குற்றம் சாட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அச்சுறுத்தும் நடத்தை மற்றும் பொது இடத்தில் முகக்கவசம் அணியத் தவறியதற்காகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 2,500 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இளைஞர், வாகனத்தை தாக்கும் வீடியோ Video Courtesy Singapore Road Accident FB Page

மேலும் பொதுவெளியில் மக்களை பயமுறுத்தும் வகையில் நடந்துகொண்ட அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts