TamilSaaga

Skill அடிக்க இன்ஸ்டியூட் போறீங்களா… Aluminum Formwork பயிற்சி முதல் டெஸ்ட் வரை எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு இருக்கும்?

Aluminum Formwork: சிங்கப்பூரில் வொர்க் பாஸ்கள் நிறைய நடைமுறையில் இருக்கிறது. அதில் சிலவை படித்தவர்களுக்கு மட்டும் இருக்கிறது. சில பாஸ்கள் தான் இரு தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. இதில் ரொம்பவே பயனுள்ளதாக பார்க்கப்படுவது தான் Skilled டெஸ்ட். இதனை முடித்து விட்டு சிங்கப்பூர் வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது.

Aluminum Formwork என்றால் என்ன

தமிழ்நாட்டில் இருக்கும் அங்கீகாரம் பெற்ற skill இன்ஸ்டியூட்களில் சேர்ந்து 45 முதல் 60 நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பயிற்சி முடித்து விட்டு மெயின் டெஸ்ட் எழுதி பாஸ் ஆகிவிட வேண்டும். இதை முடித்தால் முதலில் 4 லட்சம் வரை செலவுகள் செய்து சிங்கப்பூர் வந்து விடுவீர்கள். ஆனால் அதற்கடுத்த வருடங்களில் இதில் ஒரு மடங்கு அளவு தான் கட்டணம் கூட இருக்கும். சம்பளமும் பெரிய அளவில் இருக்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கேபிள் ஒயர் திருடியதாக சிக்கிய தமிழர்கள்… 3 பேருக்கு அபராதம்.. நான்காவது தமிழருக்கு நடந்தது என்ன?

Skill டெஸ்ட்டில் நிறைய துறைகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் சில விஷயங்களில் மாறுப்படும். அதை குறித்த் தெரிந்து கொண்டு இன்ஸ்டியூட்டில் அட்மிஷன் போடுங்கள். வரிசையாக இதுகுறித்து நமது தளத்தில் இனி தெரிவிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது தான் Aluminum Formwork Skilled test.

கட்டுமான பணிகளில் அமைக்கப்படும் சுவர்கள், மேற்கூரை மற்றும் தூண்கள் ஆகியவற்றினை கட்டும் கான்கீரிட் வேலைகளை எளிதாக முடிக்க உதவுவது தான் Aluminum Formwork என்னும் முட்டு பலகை அமைப்பு.

அலுமினியம் என்பது லேசான உலோகம். இதை கட்டுமான பணியில் பயன்படுத்தும் பொழுது எடை தாங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது. இதனால் வேலை செய்யும் இடங்களில் வைத்து வேலை செய்யும் போது தூக்க க்ரேன் தேவைப்படுவதில்லை. கட்டிடத்தின் பால்கனிகள், படிச்சுவர் ஆகியவை ஃபினிஷிங்குடன் அமைக்க ஏற்றதாக இருக்கும். மேலும் பணி முடிந்தவுடன் இதை அகற்றுவதும் எளிதானது. இதற்காக தான் Aluminium formwork நடைமுறையில் இருக்கிறது.

இதையும் படிங்க: கண்ணுல கெத்து…யாருக்கு மேன் வயசாச்சு… 67ல் வயது… Ziplineல் மாஸ் ரைட் போன பாட்டி… வீடியோ பாருங்க Goosebumpsக்கு நாங்க கியாரண்டி!

Aluminum Formwork ஸ்கில்:

இதுகுறித்து தான் உங்களின் பயிற்சிகள் நடைபெறும். தொடர்ச்சியாக அடிப்படைகள் சொல்லித்தரப்பட்டு பிராக்டிக்கலுக்கு உங்களை தயார் செய்வார்கள். இதில் மெயின் டெஸ்ட் 1 மணி நேரம் எப்போதும் போல 25 கேள்விகள் டிக் செய்வது போல அமைக்கப்பட்டு இருக்கும். அடுத்து, ஒரு வகை கணக்கும் கேட்கப்படும்.

இந்த skill பிராக்டிக்கலில் நான்கு மணி நேரம் கொடுக்கப்படும். இருவர் இணைந்து தான் பிராக்டிக்கலில் கலந்து கொள்ள வேண்டும். இதில் முதல் அரை மணி நேரத்துக்கு தனியாக ஒரு குட்டி பிராக்டிக்கலும் தரப்படும். இந்த பிராக்டிக்கலை பாஸ் செய்ய சின்ன சின்ன விஷயங்களை கூட மிஸ் செய்யாமல் முடிக்க வேண்டும் என்கின்றனர். மற்ற Skill டெஸ்ட்டினை இது ரொம்பவே எளிதாக இருக்கும்.

இன்ஸ்டியூட்டிலேயே உங்களிடம் 3 லட்சம் வரை கேட்பார்கள். அதை தொடர்ந்து கம்பெனி போட்டு தர ஏஜெண்ட் 1 லட்சம் வரை கேட்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பளமாக 18ல் இருந்து 22 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்படும். இந்த துறைகளிலும் நிறைய ஓவர் டைம் கிடைக்கும் என்கிறார்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts