TamilSaaga

சிங்கப்பூரில் 30 ஆண்டுகளாக உழைத்து உடைத்து ஓடாய் தேய்ந்த தமிழக ஊழியர் வீரையா – தூக்கத்திலேயே உயிரை விட்ட சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் தூண்டி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தார். இவரது மகன் வீரையா (வயது 48).

இவர் கடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்.23) மதியம் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிய வீரையா வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. உடனே சக பணியாளர்கள் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ குழுவினரை வரவழைத்தனர்.

“நீங்க வெளிநாட்டு ஊழியர்களுக்காக போராடியது தப்பில்ல.. அவங்கள ‘அடிமைங்க’-னு சொன்னது தான் தப்பு” – 19 வருடமாக சிங்கையில் வேலை பார்த்தவரை வீட்டுக்கு அனுப்பிய அரசு!

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வீரையா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனால், அவருடன் வேலைப்பார்த்த சக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரது பூத உடலை தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூதரகமும், அவர் வேலைப் பார்த்த நிறுவனமும் முயற்சி எடுத்தனர்.

இதன் பயனாக, நாளை (ஜூன்.26) அவரது உடல் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடையும் என்று கூறியுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் பணியிட விபத்தில் பெரியசாமி ராஜேந்திரன் உடல் நசுங்கி பலியான நிலையில், இப்போது மற்றொரு தமிழக ஊழியர் தூக்கத்திலேயே தன் உயிரை பறிகொடுத்திருக்கிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts