TamilSaaga

சிங்கப்பூரில் உங்கள் Work Permit-ஐ Transfer செய்யணுமா? நீங்க இந்த sectorல வேலை செஞ்சா இதை follow பண்ணுங்க… அடுத்த கம்பெனிக்கு ஈசியாக தாவிடலாம்!

சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனியில் இருந்து வேறு கம்பெனிக்கு மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் வொர்க் பெர்மிட் ஊழியரா நீங்க. அப்போது இந்த செய்தி உங்களுக்கு தான். நீங்க இதை தொடர்ந்து படித்தால் இருக்கும் பெரிய குழப்பத்துக்கான் தீர்வுகள் கிடைத்து விடும்.

வொர்க் பெர்மிட்டில் சிங்கப்பூர் வந்திருக்கும் சிலருக்கு வேலை செய்து கொண்டிருக்கும் கம்பெனி பிடிக்காமல் வேறு கம்பெனிக்கு வொர்க் பெர்மிட்டை மாற்றி கொள்ள எண்ணம் இருக்கும். இதற்கு வழி இருக்கிறது. முதலில் உங்களுக்கான ஒரு கம்பெனியை தேர்வு செய்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களை வேலைக்காக எடுக்கும் பட்சத்தில் எல்லா நேர்காணலும் முடித்து IPA அப்ளே செய்வார்கள். ஆனால் இதற்கு தற்போது நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், உங்களை 1 அல்லது 2 வருட காண்ட்ராக்டில் வேலைக்கு எடுத்து வந்திருப்பதால் அது முடிவடையும் வரை வெளியில் விட விரும்ப மாட்டார்கள். சில கம்பெனிகள் தான் ப்ராஜெக்ட் இல்லாத நிலையில், ஊழியர்கள் கேட்கும் trans letterஐ ஓகே செய்வார்கள். அதனால் முதலில் நீங்கள் வேலை செய்யும் கம்பெனி தான் இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு TWPல் வர நினைக்கும் ஊழியரா நீங்க… வெயிட்.. வெயிட்.. Apply செய்யப்போகும் முன் இதை படிங்க… இதெல்லாம் கூட செக் பண்ணுவாங்க

அடுத்து, இவர்கள் ஒப்புதல் தராதபட்சத்தில் வொர்க் பெர்மிட்டின் காலாவதி 40 முதல் 21 நாட்களுக்குள் இருந்தால் உங்களுக்கு கம்பெனியின் ஒப்புதல் தேவை இருக்காது. புது கம்பெனிக்கு மாற முடியும். ஏன் இந்த ஒப்புதல் என்றால் பழைய கம்பெனி நீங்க மாறுவதை ஒப்புக்கொண்டு trans-letter கொடுத்து விடுவார்கள். உங்களின் பழைய வொர்க் பெர்மிட் கேன்சல் செய்து விடுவார்கள். ஒப்புதல் பெறாத பட்சத்தில் அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் உங்கள் மீது பழைய கம்பெனி நிர்வாகம் போலீசில் கூட புகார் கொடுக்க முடியும்.

இதனால் ஒப்புதல் இல்லாத பட்சத்தில் 40 முதல் 21 நாட்களுக்குள் வொர்க் பெர்மிட் காலாவதி இருக்கும் போது எளிதாக நீங்க மாற முடியும். வொர்க் பெர்மிட்டில் வேலை செய்யும் Marine Shipyard, service மற்றும் manufacturing துறைகளில் இந்த திட்டம் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும். ஆனால், construction மற்றும் process துறைகளில் மட்டும் இந்த திட்டம் permanent ஆக கொண்டு வரப்பட்டதாக என்பது குறித்து MOM வெப்சைட்டில் சொல்லப்படவில்லை. இருந்தும் இத்துறைகளிலும் இந்த திட்டம் இன்னும் இருக்கிறது.

இதையும் படிங்க: நியூ இயர் வந்தாச்சு… Skilled test ரிசல்ட் என்னாச்சு… சிங்கையில் Skilled test..? வெளியான சில கள நிலவரங்கள்

கம்பெனியில் இருந்து மாறுவதற்கு நிர்வாகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் அளித்தால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் மாறிக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் ஓகே சொல்லாத பட்சத்தில் இந்த ட்ரான்ஸ்பர் என்பது கஷ்டமாக தான் இருக்கும். இன்னும் சிலருக்கு கம்பெனி ஒப்புதல் தராமல் விசா முடிந்தவுடன் நேராக விமான நிலையம் சென்று இந்தியாவிற்கு விமான ஏற்றி விட்டு தான் நகர்வதாக கூட சில தகவல்கள் வெளியானது. அப்படி இருக்கும் சூழலில் நீங்கள் இந்தியா போய்விட்டு தான் மீண்டும் சிங்கப்பூருக்கு வர முடியும். இந்த விதி குறித்து நன்கு தெரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் ஏஜென்ட் யாரும் உங்களால் இப்படி மாற முடியும் எனக் கூறி அதிக கட்டணம் கேட்டாலும் கொடுக்காமல் தப்பிக்க முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts