TamilSaaga
singapore to trichy

Exclusive: அடிச்சது ஜாக்பாட்! திருச்சி to சிங்கப்பூர் விமான டிக்கெட் விலை ரூ.6,000 – புக்கிங் செய்ய குவியும் Inquiries

இந்தியா – சிங்கப்பூர் இடையே திட்டமிடப்பட்ட வணிக விமானங்களை மீண்டும் தொடங்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து, கடந்த நவம்பர் 29 அன்று இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்காக சிங்கப்பூர் சார்பில் VTL திட்டம் தொடங்கப்பட்டது. VTL-ன் கீழ், கோவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழையலாம், ஆனால் புறப்படுவதற்கு முன்பும் சாங்கி விமான நிலையத்திற்கு வந்தவுடன் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அதேசமயம், சிங்கப்பூர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி Non VTL சேவைகளும் தொடங்கப்பட்டது. Fly Scoot, Indigo உள்ளிட்ட விமான நிறுவனங்கள் Non VTL சேவைகளை தொடங்கிவிட்டன.

மேலும் படிக்க – “புக்கிட் பாடோக் டவுன் பூங்கா” : முகக்கவசம் இல்லாமல் சட்டவிரோதமாக மீன் பிடித்த இளைஞர் – நீதிமன்றத்தில் ஆஜர்

21 மாதங்களாக சிங்கப்பூர் – திருச்சி விமான டிக்கெட் விலையை, குறிப்பிட்ட அளவு நிர்ணயம் செய்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மட்டும் இயங்கி வந்தது. இப்போது Non VTL சேவைகளாக IndiGo மற்றும் Fly Scoot இணைந்துள்ளதால் விமான டிக்கெட் விலை வெகுவாக குறைந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வருவதற்கான டிக்கெட் விலை ரூ.6000-லிருந்து தொடங்குகிறது. அதே போல், திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கும், Fly Scoot-ல் ரூ.6000-லிருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது. ஆனால், இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், சில குறிப்பிட்ட தேதிகளில் தான் இந்த குறைவான கட்டணத்தில் டிக்கெட் கிடைக்கிறது. அதுவும், Fly Scoot-ல் தான் கிடைக்கிறது.

மேலும் படிக்க – “பெருந்தொற்று சிகிச்சைக்கு Anti-Body மருந்து” : இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கு வழங்க முடிவு – AstraZeneca

சில முக்கிய நாட்களில் ரூ.1 லட்சம் வரை திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த டிக்கெட் விலை பெரும் ஆறுதலை கொடுக்கிறது. எனினும், அது குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் கிடைப்பதால், புக்கிங் செய்வதில் கடும் போட்டியும் நிலவுகிறது.

Source – Nandana Travels, Trichy

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts