TamilSaaga

“சிங்கத்தின் சிம்மாசனம்”… இன்று சிங்கப்பூரின் Acting பிரதமராக பதவியேற்கும் லாரன்ஸ் வோங் – விடுமுறையில் பிரதமர் லீ!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது பதவிக்காலங்களில் அவ்வப்போது ஓய்வு எடுக்க கொடநாடு செல்வது வழக்கம். அங்கிருந்து கொண்டே ஆட்சி அதிகாரங்களை கவனித்துக் கொள்வார் (!?). குறைந்த ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை அங்கு தங்கியிருப்பார்.

எப்பேர்ப்பட்ட முக்கியமான விஷயங்களாக இருந்தாலும், அதிகாரிகள் கோப்புகளை எடுத்துக் கொண்டு சென்னை – கொடநாடு என இரு மார்க்கமாக பயணித்துக் கொண்டிருப்பார்கள். ‘தலைவா’ பட டைட்டிலில் (Time to Lead) என்ற Quote இடம் பெற்றதற்காக அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் அதன் தயாரிப்பாளர் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வில் இருந்தார்.

படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று அப்படத்தின் நாயகனும் அப்போதைய இளையத் தளபதியும், இப்போதைய தளபதியுமான நடிகர் விஜய், படத்தின் தயாரிப்பாளருடன் நேரடியாக கொடநாட்டிற்கே சென்றுவிட்டார். Appointment எதுவும் வாங்காமல், ஒரு குருட்டு நம்பிக்கையில் கொடநாடு எஸ்ட்டேட் கேட் வரை சென்றுவிட்டார்.

Gate-க்கு வெளியே காரிலேயே மணிக்கணக்கில் காத்திருந்த விஜய்க்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து வந்த பதில், ‘மேடம் இப்போ பார்க்க அனுமதி கொடுக்கல’ என்பது தான். தமிழக சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக உருவெடுத்த பிறகு, தன் கரியரில் அப்படியொரு புறக்கணிப்பை பார்த்திராத விஜய், வெறுத்துப் போய் கொடநாட்டில் இருந்து திரும்பி வந்தார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் அண்ணன் வாங்கிய லாரிக்கு கடன் கையெழுத்து போட்ட தம்பி.. வாழ்க்கையை தொலைத்த கொடுமை! – எச்சரிக்கும் உண்மை சம்பவம்

இது ஏதோ நாம் சொல்லும் கதை இல்லீங்க.. ‘விஜய்-கிட்ட நான் எவ்வளவோ சொன்னேன்… அந்தம்மா உன்னைபார்க்க மாட்டாங்க, போக வேண்டாம்னு. கேட்காம போனார். மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்” என்று விஜய்யின் தந்தை SAC சொன்ன விஷயம் இது. அந்த அளவுக்கு தனது விடுமுறை நாட்களை முக்கியமாக கருதியவர் ஜெயலலிதா.

அதேசமயம், எதிர்க்கட்சித் தரப்பில் ஜெயலலிதாவின் ஓய்வு மிகக் கடுமையாக விமர்சிக்கப்படும். ‘மக்கள் மீது எந்த கவலையும் இல்லை; மக்கள் பணியை விட ஓய்வு முக்கியமா?’ என்று சரமாரியாக அறிக்கைகள் வெளியாகும். ஜெயலலிதா ஓய்வுக்கு கொடநாடு செல்வதை வைத்து திமுக ஒரு அரசியல் Stunt செய்துவிடும்.

மக்கள் பணியில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்பது கூடாது என்ற பொதுவான புத்தியே இந்தியாவில் நிலவுகிறது. ஜெயலலிதாவை விடுங்கள்.. பிரதமர் மோடி ‘நான் ஒருவாரம் எனது பணியில் இருந்து விடுமுறை எடுக்கப் போகிறேன் என்று சொன்னால்’ என்ன நடக்கும்? கற்பனை செய்து பாருங்கள். திரும்பி வரும் போது, அவரது பிரதமர் பதவி இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

ஆனால், இப்படியொரு அறிவிப்பு சிங்கப்பூர் பிரதமரிடம் இருந்து வந்துள்ளது. ஆம்! சிங்கை பிரதமர் லீ, இன்று (ஜூன்.13) முதல் ஜூன்.19 வரை தனது பணியில் இருந்து விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். அதாவது, பிரதமர் லீ திங்கள் முதல் ஞாயிறு வரை விடுமுறையில் இருப்பார்.

எனினும், இந்த ஒருவார விடுமுறை காலத்தில் சிங்கப்பூரில் இருக்கப் போவதாகப் பிரதமர் லீ தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் புத்தகங்கள் வாசிக்கவும் பல இடங்களைச் சுற்றிப்பார்க்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts