TamilSaaga

“புக்கிட் பாடோக் டவுன் பூங்கா” : முகக்கவசம் இல்லாமல் சட்டவிரோதமாக மீன் பிடித்த இளைஞர் – நீதிமன்றத்தில் ஆஜர்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு புக்கிட் பாடோக் டவுன் பூங்காவில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காகவும். மேலும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீறியதற்காகவும். தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட 17 வயது இளைஞர் கடந்த வியாழன் (டிசம்பர் 9) அன்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். இதற்கு முன்பவாக சென்ற முறை நடந்த நீதிமன்ற அமர்வில் அந்த இளைஞருக்காக அவரது பெற்றோர் நீதிமன்றத்தில் 300 வெள்ளி அபராதம் செலுத்தினர்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் கழிவறைக்குள் சென்ற கர்ப்பிணிப் பெண் கைக்குழந்தையுடன் வெளியேறிய சம்பவம்

18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளின் அடையாளங்களை வெளியிடுவதற்கு சிங்கப்பூர் சட்டங்கள் தடை விதித்துள்ளதால், அந்த இளைஞரின் பெயரைக் குறிப்பிட நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. ஏழு பேர் கொண்ட குழுவிலிருந்து குறைந்தபட்சம் 1 மீ தூரத்தை வைத்திருக்க தவறியதாகவும், அனுமதியின்றி ஒரு பொது பூங்காவில் மீன்பிடித்ததாகவும் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி தண்டனையின் போது, ​​அவரது மூக்கு மற்றும் வாயில் முகமூடி அணியாதது உட்பட இதே போன்ற மூன்று குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பரிசீலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. லிட்டில் குய்லின் என்று அழைக்கப்படும் புக்கிட் பாடோக் டவுன் பூங்காவில் கூடி பெருந்தொற்று தடுப்பு சட்டங்களை மீறியதற்காக அந்த இளைஞர் கடந்த மே 31 அன்று அபராதத்தை செலுத்தியதாக துணை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த இளைஞர் தனது குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்ட பிறகு, நீதிபதி, அவர் இரவில் தாமதமாக வெளியே செல்வது அவரது பெற்றோருக்குத் தெரியுமா என்று கேட்டார்?. மேலும் அவர் கோவிட் -19 விதிகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts