TamilSaaga

சிங்கப்பூரில் பெருந்தொற்று தடுப்பு விதி மீறல்.. 39 பேரிடம் போலீசார் விசாரணை – 3 பேர் கைது

சிங்கப்பூரில் உரிமம் பெறாத இரண்டு வெவ்வேறு பொது பொழுதுபோக்கு நிலையங்களில் கோவிட் -19 தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக 36 பேரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நடவடிக்கையின்போது 24 முதல் 37 வயதுக்குட்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 17 ம் தேதி, செலிகி சாலை மற்றும் தாகூர் லேன் ஆகிய இடங்களில் அமைந்துள்ள உரிமம் பெறாத இரண்டு பொது பொழுதுபோக்கு நிலையங்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுத்தது நினைவுகூரத்தக்கது.

செலிகி சாலையில் உள்ள பொழுதுபோக்கு நிலையத்தில் மொத்தம் 14 ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் பிடிபட்டனர். அவர்கள் 20 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரிவின் ஆபரேட்டர்கள் என்று நம்பப்பட்டது 24 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் இல்லாமல் மதுபானம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் மதுபானக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Related posts