TamilSaaga
jobs in singapore

சிங்கப்பூரில் ட்ரைவருக்கு வேலைவாய்ப்பு (Jobs in Singapore) எப்படி இருக்கும்? அப்ளே செய்ய என்னென்ன Documents வேணும்.. இத படிங்க முதல!

Jobs in Singapore: சிங்கப்பூரில் வேலைக்காக செல்ல இருக்கும் இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பது என்னவோ டிரைவிங் வேலைக்கு தான். இந்த வேலையில் வேலைக்கு வருபவர்களின் சம்பளம் எப்படி இருக்கும். வேலைகள் எப்படி கொடுக்கப்படும் என்ற முக்கிய தகவல்கள் உங்களுக்காக.

டிரைவிங் Jobs in Singapore:

சிங்கப்பூரில் டிரைவிங் வேலைகள் டெலிவரி நிறுவனத்திலும், ஊழியர்களை பிக்-அப் மற்றும் ட்ராப் செய்ய எடுக்கப்பட்டு வருகிறார்கள். சிங்கப்பூர் வேலைக்கு வரும்போது உங்களிடம் வேறு நாட்டு ட்ரைவிங் லைசன்ஸை வைத்து வேலைக்கு கண்டிப்பாக வரவே முடியாது. PSA என்னும் துறைமுகத்தில் மட்டும் இந்திய லைசன்ஸ் வைத்து வேலைக்கு வர முடியும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் யாரெல்லாம் Class 3 லைசன்ஸ் எடுக்கலாம்? எப்படி எடுக்கணும்? அதுக்கு நீங்க என்ன செய்யணும்? இதை அப்படியே follow பண்ணுங்க

சிங்கப்பூருக்கு டிரைவராக நேரடியாக வர முடியாது. தொழிலாளராக pcm பெர்மிட் அல்லது வொர்க் பெர்மிட்டில் வந்து விடலாம். இங்கு வேலை செய்துக்கொண்டே டிரைவிங் பயிற்சிகள் எடுத்து விட வேண்டும். அடுத்து, லைசன்ஸ் வாங்கியவுடன் உங்களால் டிரைவிங் வேலைக்கு மாறிக்கொள்ள முடியும்.

டிரைவருக்கு வழங்கப்படும் சம்பளம்(Jobs in Singapore):

சிங்கப்பூரில் வேலைக்காக நீங்க வொர்க் பெர்மிட்டில் வந்தால் உங்களுக்கு 1900 சிங்கப்பூர் டாலரில் தொடங்கி 2500 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் கொடுக்கப்படும். SPassல் வேலைக்கு வந்தால் 3000 சிங்கப்பூர் டாலருக்கு மேல் சம்பளம் கொடுக்கப்படும். மேலும் சில நிறுவனங்கள் ஊழியராக உங்களை எடுக்கும் போது டிரைவிங் வேலைக்கு தனியாக ஒரு குறிப்பிட்ட சம்பளத்தினை கொடுப்பார்கள். இது கம்பெனிக்கு ஏற்ப மாறுபாடு இருக்கும்.

சிங்கப்பூரில் லைசன்ஸ் எடுக்கும் அதிகாரப்பூர்வ மையங்கள்:

லைசன்ஸ் சென்டர்:

Bukit Batok Driving Centre
815 Bukit Batok West Ave 5, Singapore 659085
T – 1800 666 8888
ComfortDelGro Driving Centre
205 Ubi Ave 4, Singapore 408805
T – 6841 8900, 6848 0617
Singapore Safety Driving Centre
2 Woodlands Industrial Park E4, Singapore 757387
T – 6482 6060

மேலும் சிங்கப்பூரில் லைசன்ஸ் அப்ளே செய்து பெற்றுக்கொண்ட பிறகு உங்களால் கம்பெனியில் ட்ரைவராக சேர்ந்து வேலை செய்து கொள்ள முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts