TamilSaaga

“சிங்கப்பூர் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தளர்வு” : மகிழ்ச்சியில் “Little India” – பல சலுகைகளுடன் காத்திருக்கும் LISHA

சிங்கப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தொற்றுநோய் பரவளின் விளைவாக வார இறுதி நாட்களில் லிட்டில் இந்தியா பகுதியில் திரளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் தங்குமிடங்களில் முடங்கினர். இதன் விளைவாக லிட்டில் இந்தியாவில் கடைகள் வைத்திருந்த கடைக்காரர்கள் மிக கடுமையான வருமான வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோய்க்கு முந்தைய வார இறுதி நாட்களில் 2,00,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கூட்டம் லிட்டில் இந்தியாவில் கூடிய நிலையில், அவர்களுடைய முடக்கத்தால் இங்கு வருபவர்களின் அளவு விடுதிகளுக்கு வெளியே வாழும் சில ஆயிரம் மக்களாக குறைந்துவிட்டது என்று லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கத்தின் (லிஷா) கௌரவ செயலாளர் திரு. ருத்திரபதி பார்த்தசாரதி கூறினார்.

இந்நிலையில் லிட்டில் இந்தியா, வாராந்திர அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்ட 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுமதிக்கும் என்று வெளியான தகவல் நீடகளமாக இந்த செய்திக்காக காத்திருந்த வியாபாரிகளின் காதில் இசையென நனைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரு ருத்திராபதி (52) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அளித்த தகவலின் அடிப்படையில் (லிஷா) மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து இந்த பைலட் திட்டத்தை மெய்யாக்க உழைக்கும் என்று கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, லிட்டில் இந்தியாவிற்கு தொழிலாளர்கள் வருகை தருவது பற்றி விவாதிக்க MOM உடன் ஒரு ஆன்-சைட் சந்திப்பை நடத்தியது என்றும் அவர் கூறினார். கடந்த சனிக்கிழமையன்று, லிஷா அமைப்பு MOM அதிகாரிகளுடன், ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில், மஸ்ஜித் அங்குலியா மற்றும் அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பைலட் திட்டத்தில், தொழிலாளர்களுக்கு என்று இடமளிக்க ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் அதன் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்கும் என்று திரு. ருத்திரபதி கூறினார். மேலும் லிஷா, மளிகைக் கடைக்காரர்களுடன் சேர்ந்து, இந்த திட்டத்தின் தொடக்கத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறிய தள்ளுபடிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Related posts