TamilSaaga

“கவனக்குறைவாக செயல்பட்டாரா ஓட்டுநர்?” : பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண்மணி – காணொளி உள்ளே

சிங்கப்பூரின் ஹூகாங் இன்டர்சேஞ்சில் ஒரு வயதான பெண்மணி பேருந்தில் இருந்து இறங்கும் போது அந்த பேருந்து ஓட்டுனர் கதவை முடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 9) மதியம் 2.40 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தின் ஒரு நிமிட வீடியோ, பேருந்தின் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 11) முதல் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் அந்தப் பெண் பேருந்தில் இருந்து இறங்க சிரமப்படுவதைக் நம்மால் பார்க்கமுடிகிறது. இறங்க முற்படும்போது கதவுகள் மூடியதால் அந்த பெண்மணி பேருந்துக்கும் இன்டர்சேஞ்ச் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியில் விழுந்துள்ளார். இதனை கண்டதும் நியான் ஆடையில் இருந்த பேருந்து ஓட்டுநர் அவருக்கு உதவிக்கு விரைந்ததையும் நம்மால் கான முடிந்தது.

பாதிக்கப்பட்ட பெண்மணி பேருந்தில் இருந்து கீழே விழும் காணொளி – Video Curtsey Singapore Road Accident FB Page

SBS ட்ரான்சிட்டின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மூத்த துணைத் தலைவர் திருமதி டாமி டான், பேருந்து ஓட்டுநரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அவருக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“நல்வாய்ப்பாக அந்த பெண்மணி பலத்த காயமடையாமல் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார்”, என்றும் பஸ் கேப்டனுக்கு எதிராக நாங்கள் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றும் அவர் கூறினார். மேலும் அவரது செயல்திறனை உன்னிப்பாகக் கண்காணிப்போம்.” SBS Transit அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தனது உதவியை வழங்குவதற்காக தொடர்பில் இருப்பதாகவும், மேலும் அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related posts