TamilSaaga

Exclusive : “சிங்கப்பூர் – இந்தியா விமான பயணம்” : தடுப்பூசியில் உள்ள “நடைமுறை சிக்கல்” – தீர்வு கிடைக்குமா?

2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் என்ற நகரில் தான தோன்றியது அந்த தொற்று, அட ஒற்றை நோய் கிருமிதானே அது. சுமார் 196 நாடுகளில் உள்ள 650 கோடிக்கும் மேல் உள்ள இந்த ஜனத்தொகை என்ன செய்துவிட முடியும் என்று தான் நாம் நினைத்தோம். சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் வெப்பம் அதிகம் ஆகையால் நமக்கெல்லாம் எப்படி இந்த நோய் பரவும் என்றும் நாம் நினைத்த காலம் உண்டு. ஆனால் ஆண்டுகல் இரண்டு எப்படி கடந்தது என்று தெரியவில்லை. ஒருவித முடக்கநிலையில் நாமும் வாழ்ந்து வருகின்றோம்.

“அந்த இந்திய செவிலியர் மகளை நினைத்து துடித்தார்” : சிங்கப்பூரில் உயரும் செவிலியர்களுக்கான தேவை – ஏன்? பெருந்தொற்று படுத்திய பாடு என்ன?

பல லட்சம் உயிர்களை காவுகொடுத்த நிலையில், பல அறிஞர் பெருமக்களின் முயற்சியால் உருவானது இந்த கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள். ஒரு டோஸ், இரண்டு டோஸ் என்று என்று தற்போது பூஸ்டர் ஊசிகளை சேர்த்து மூன்று தடுப்பூசிகளை உலகில் எல்லா நாடுகளும் வழங்கி வருகின்றது. உலக அளவில் எந்த நாட்டிற்கு நீங்கள் பயணிக்க வேண்டுமென்றாலும் அதற்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஆனால் சிங்கப்பூர் – இந்தியா பயணத்தில் ஒரு மாபெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும், இதுகுறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

சிங்கப்பூர்..

நமது சிங்கப்பூர் உலக அளவில் அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ள நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தற்போது சிங்கப்பூர் தடுப்பூசிகளை வழங்கி வருகின்றது. அதே நேரத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், அதாவது பயணிகள் சிங்கப்பூர் வரும்போது அவர்களும் நிச்சயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் சட்டத்திடம் கூறுகின்றது.

இந்தியா..

அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை 15 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே அங்கு தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவும் உலக அளவில் தனது குடிமக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்கி வருகின்றது.

மறைந்திருக்கும் சிக்கல்.

தற்போது சிங்கப்பூர் – இந்தியா இடையே VTL மற்றும் NON VTL சேவைகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்தியாவில் இருந்து மக்கள் சிங்கப்பூர் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் 13 மற்றும் 15 வயதிற்கு இடைப்பட்ட வயதுள்ள பயணிகள் (சிறுவர், சிறுமிகள்) மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகின்றனர். ஆம் இந்தியாவின் 15 வயதுக்கு மேல் தான் தடுப்பூசி போடமுடியும், ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை 12 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

சிங்கப்பூர்.. அதிகாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ : இரு பெண்கள் மருத்துவமனையில் – 73 வயது முதியவர் கைது – ஏன்?

தற்போது இந்த பிரச்சனை பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, மேற்குறிப்பிட்ட அந்த வயதுக்குட்பட்ட பயணிகள் பயணிக்க முடியாமல் அவர்களுடைய குடும்பத்தினரும் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே இரு நாட்டு அரசும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பயணிகளுக்கு ஒரு தீர்வினை தரவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Source

நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts