TamilSaaga

“சிங்கப்பூரின் அழகை காண இன்னொரு வழி” : விரைவில் திறக்கும் SkyHelix Sentosa – டிக்கெட் புக் செய்வது எப்படி?

இன்னும் சிங்கப்பூர் வாசிகள் பெரியளவில் வெளிநாடு செல்ல தயாராக இல்லை என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் தான் வரும் டிசம்பர் மாதம் திறக்கவுள்ளது SkyHelix Sentosa. நீங்கள் உங்கள் பாஸ்போர்ட்டை எடுக்காமலேயே நீங்கள் இப்பொது ஆகாயத்தில் மிதக்கலாம். மேலும் இந்த SkyHelix உங்களுக்கு உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த விடுமுறையை செலவிடும் இடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சென்டோசாவின் சமீபத்திய ஈர்ப்பு – அதன் ஆபரேட்டரான மவுண்ட் ஃபேபர் லீஷரின் கூற்றுப்படி திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே திறக்கப்படும் என்று கருதப்படுகிறது. இது ஒரு நேர்த்தியான, இரட்டை முறுக்கப்பட்ட கோபுர அமைப்பாகும். இது திறந்தவெளி கோண்டோலாவுடன் மெதுவாக 35 மீ வரை உயரும். இது இம்பியா லுக்அவுட் நிலையத்திலும் கேபிள் கார்கள் போன்ற மற்ற இடங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 12 நிமிட சவாரியில் நீங்கள் அதன் உச்சியை எட்டியதும் சிங்கப்பூரின் அழகை ரசிக்க 10 நிமிடங்கள் அங்கேயே நிறுத்தப்படும். இது கடல் மட்டத்திலிருந்து 79 மீ உயரத்தில் சென்டோசாவில் உள்ள மிக உயரமான புள்ளிகளில் ஒன்றாகும். இது சிங்கப்பூரின் மிக உயர்ந்த திறந்தவெளி பனோரமிக் சவாரி ஆகும். இந்த நேரத்தில், பயணிகளுக்கு தீவின் 360 டிகிரி காட்சியை வழங்குவதற்காக கோண்டோலா மெதுவாக சுழலும் என்பதும் நினைவுகூரத்தக்கது.

மக்கள் கையில் மதுவில்லாமல் SkyHelix Sentosa நினைவுப் பொருளைக் பற்றிக்கொண்டு, காற்றில் கால்களைத் அலைபாயவிட்டு தங்கள் பயணத்தை அனுபவிக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது . இந்த சவாரிக்கு பெரியவர்களுக்கு 18 வெள்ளியும் நான்கு முதல் 12 வயது வரையிலான வயதுடைய குழந்தைக்கு 15 வெள்ளியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மவுண்ட் ஃபேபர் லீஷரின் கூற்றுப்படி, ஸ்கைஹெலிக்ஸ் சென்டோசா குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஆற்றல் திறன் கொண்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட விருந்தினர்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் மட்டுமே பயணம் செய்யலாம். டிக்கெட்டுகள் பதிவு செய்ய இந்த இணையத்தை அணுகலாம்.

Related posts