TamilSaaga

“சிங்கப்பூர் Shaw Centre பகுதியில் தீ விபத்து” : 200 பேர் உடனடியாக வெளியேற்றம் – பல கடைகள் மூடல்

சிங்கப்பூரில் ஷா சென்டரில் நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 22) காலை தீ விபத்து ஏற்பட்டதால், ஆர்ச்சர்ட் சாலைக்கு அருகில் இருந்த ஷாப்பிங் சென்டரில் இருந்து சுமார் 200 பேர் உடனடியாக வெளியேற்றப்பெற்றனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) காலை 10.15 மணியளவில் 1 ஸ்காட்ஸ் சாலையில் நடந்த சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதாகக் கூறியது. “சம்பவம் நடந்த வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு யூனிட்டில் மின்சார சர்க்யூட் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது” என்று SCDF தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “உங்களை வியப்பில் ஆழ்த்தும், சிங்கப்பூரின் சின்ன சின்ன ரகசியங்கள்”

தண்ணீர் தெளிப்பான் அமைப்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒரு நீர் ஜெட் மூலம் அந்த தீயை அணைத்ததாகவும் SCDF மேலும் கூறியது. மேலும் இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை மற்றும் SCDF வருகைக்கு முன்னதாக சுமார் 200 பேர் அந்த வளாகத்தில் இருந்து தாங்களாகவே வெளியேறினார் என்று தகவல் கிடைத்துள்ளது.

வெளியான ஊடக காட்சியின் புகைப்படங்களில் சுமார் 10 தீயணைப்பு வீரர்களுடன் பல SCDF வாகனங்கள் கிளைமோர் Hill பகுதியில் இருப்பதைக் காணமுடிந்தது. கட்டிடத்தை ஒட்டிய நடைபாதையில் மக்கள் காத்திருப்பதையும் காணமுடிந்தது. ஊடகங்ளில் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, Les Amis Group அதன் La Taperia உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

மேலும் “இந்த சம்பவம் குறித்து இன்னும் விசாரணை நடந்துவருகிறது என்றும் நாங்கள் SCDF குழுவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். “எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் காயங்கள் எதுவும் யாருக்கும் ஏற்படவில்லை”

Related posts