TamilSaaga

“சிங்கப்பூரில் மீண்டும் அதிகரித்த தினசரி தொற்று எண்ணிக்கை?” : Dormitoryயில் 102 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 6) மதியம் நிலவரப்படி 3,035 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 12 பேர் வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 60 மற்றும் 98 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சிங்கப்பூரில் பெருந்தொற்றால் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை பதிவான 1,767 நோய்த்தொற்றுகளிலிருந்து சனிக்கிழமை பதிவான புதிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் சனிக்கிழமை நிலவரப்படி 0.83 ஆக உள்ளது. இது வெள்ளிக்கிழமை நிலவரப்படி 0.81 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் சமூக வழக்குகளின் விகிதத்தைக் குறிக்கிறது. இது தொடர்ந்து நான்காவது நாளாக வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 1க்கு கீழே உள்ளது என்பது நிம்மதி தரும் செய்தியாக உள்ளது. சனிக்கிழமை பதிவான புதிய வழக்குகளில், 3,030 நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் பரவுகின்றன, இதில் சமூகத்தில் 2,928 பேர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கு தொற்று பரவல் உறுதியாகியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறியுள்ளது. இதுவரை நாட்டில் 2,15,780 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts