TamilSaaga

“இது நான் கேட்ட Irish வாத்து இல்ல”.. சாப்பாட்டை ஆர்டர் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற சிங்கப்பூரர் – கடுப்பான உணவகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

அண்மைக்காலமாக கோளாறுமிக்க பல வாடிக்கையாளர்களை சிங்கப்பூர் உணவகங்கள் எதிர்கொண்டு வருகின்றது என்று தான் கூறவேண்டும். கடந்த மார்ச் 23 அன்று Duck Land குழுமம் வெளியிட்ட பதிவில் தங்களுடைய F&B நிறுவனமான Duck Land PLQ அவுட்லெட்டில் ஒரு வாத்துப்பிரியரை எதிர்கொண்டதாக கூறியுள்ளது.

“சிங்கப்பூருக்கு இனி திருச்சியில் இருந்து மட்டுமே NON VTL சேவை” – சென்னையில் இருந்துகூட போகமுடியாது – திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுடச்சுட Exclusive களநிலவரம்

அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த “வாத்து விரும்பி” பதிவு போடப்பட்ட அதே நாளில் தான் அந்த கடைக்கு சென்றுள்ளார். உணவருந்த தனியாக வந்த அந்த நபர், S$35 விலையுள்ள Half Roast Irish Duck ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். சுட சுட வாத்து அவருக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது, இருப்பினும் வாத்து அவருக்கு பரிமாறப்பட்டபோது, ​​அருகில் இருந்த ஹோட்டல் ஊழியர் ஒருவரை அழைத்து, தனக்கு வழங்கப்பட்டது ஐரிஷ் வாத்து அல்ல என்று கூற அவர் செய்வதறியாது நின்றுள்ளார்.

பின் நிதானித்து “இல்லை சார் இது உண்மையில் எங்கள் கடையில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் ஸ்பெஷல் Irish வாத்து தான் என்று கூற அவர் அதற்கு பிடிகொடுக்கவில்லை. இறுதியாக அந்த பணியாளர் அருகில் இருந்த மேனேஜரை கூப்பிட அந்த பெண்ணும் வந்து சார் இது எங்கள் ஹோட்டல் ஸ்பெஷல் வாத்து என்றும். உண்மையில் இது Silver Hill Irish Duck என்று முழு விளக்கத்தை கூறியும் அவர் இல்லை இது Irish வாத்து இல்லை என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இனி வெளியில் செல்ல “Exit Pass” Apply செய்ய வேண்டாம் – பிரதமர் லீ அறிவிப்பு.. “இதுதான் உண்மையான சந்தோஷம்”

இறுதியில் ஆர்டர் செய்ததை சாப்பிடாமல் எந்தவித பதிலும் சொல்லாமல் தான் கொண்டு வந்த உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார் அந்த ஆசாமி. இந்த நிகழ்வை தொடர்ந்து மற்ற உணவகங்கள் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு இந்த நபரைக் பற்றி ஒரு “எச்சரிக்கை” விடுக்கவே இந்த பதிவை வீடியோவுடன் பதிவேற்றியதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டள்ளது.

“உணவு ஆர்டருக்கு பணம் செலுத்தாமல் உணவகத்தை விட்டு வெளியேறியதற்காக நிச்சயம் இந்த நபர் குறித்து நாங்கள் போலீசில் புகார் அளிப்போம் என்றும் கூறியுள்ளது” அந்த நிறுவனம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts