TamilSaaga

சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இனி வெளியில் செல்ல “Exit Pass” Apply செய்ய வேண்டாம் – பிரதமர் லீ அறிவிப்பு.. “இதுதான் உண்மையான சந்தோஷம்”

சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரும் ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு மையங்களைப் பார்வையிட வெளியேறும் முன் அனுமதிச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை, மேலும் இந்த நடவடிக்கைகள் தங்குமிடங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பொருந்தும் என்றும் பிரதமர் லீ தெரிவித்துள்ளார். இன்று (மார்ச் 24) அறிவிக்கப்பட்ட பல தளர்வுகளில் இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Exclusive : “என் மகனை இன்னும் தொட்டுகூட பார்க்கல.. குற்ற உணர்ச்சி என்னை குத்துது” – சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக தொழிலாளியின் வேதனை!

இதற்கு முன்பு சிங்கையில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய தங்குமிடங்களிலிருந்து வெளியேறும் முன், சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கான அனுமதிச் சீட்டுக்கு (Exit Pass) தாங்கள் பணி செய்யும் நிறுவனங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் இனி தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் மட்டும் அந்த Exit Pass எடுத்து ART சோதனை முடித்து பொது இடங்களுக்கு சென்றுவரலாம். மற்றபடி முழுமையாக தடுப்பூசி போட்ட தொழிலாளர்கள் Exit Passக்கு Apply செய்ய தேவையில்லை.

கடந்த வாரம், பொது இடங்களுக்கு சென்று வருவதற்கு வார நாட்களில் 15,000 தொழிலாளர்களும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 30,000 தொழிலாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்த திருத்தப்பட்ட ஒதுக்கீடுகளில் தற்போது எந்தவித மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் MOH இன்று வியாழன்று வெளியிட்ட அறிக்கையில் இனி தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட தொழிலாளர்களின் வருகைக்கு முன்னதான ART சோதனை அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்றும், பூஸ்டர் தடுப்பூசிகளின் விகிதமும் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து தங்குமிடங்களில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே உள்ளது.

Big Breaking : அனைத்து தடைகளும் நீங்கியது – தடுப்பூசி போட்ட எல்லா இந்திய பயணிகளும் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூர் வரலாம்

கடந்த 2020ம் ஆண்டு பெருந்தொற்று அதிகரித்தபிறகு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், தொற்று நோய்கள் பரவும் அபாயத்தைக் குறைக்கவும் கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசாங்கம் டார்மிட்டரிகளில் புதிய தரநிலைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts