TamilSaaga

“சிங்கப்பூருக்கு இனி திருச்சியில் இருந்து மட்டுமே NON VTL சேவை” – சென்னையில் இருந்துகூட போகமுடியாது – திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுடச்சுட Exclusive களநிலவரம்

சுமார் 2 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த நேரத்தில் உலக அளவில் தற்போது மீண்டும் ஒரு மீட்சி பிறந்துள்ளது. பல நாடுகள் தங்கள் எல்லைகளை திறக்கின்றனர். பொதுவெளியில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்புகள் வருகின்றன. அந்த வகையில் நமது சிங்கப்பூர் அரசு தற்போது தங்கள் எல்லைக்கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றது. ஆனால் இது ஒருபுறம் இருக்க சிங்கப்பூர் இந்தியா இடையிலான VTL விமான சேவைகளின் அளவு தற்போது அதிர்க்கரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இனி வெளியில் செல்ல “Exit Pass” Apply செய்ய வேண்டாம் – பிரதமர் லீ அறிவிப்பு.. “இதுதான் உண்மையான சந்தோஷம்”

சரி VTL சேவைகள் அதிகரித்தால் என்ன? அது நல்லதுதானே என்று கேட்கும்பட்சத்தில், சில நேரங்களில் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்திகின்றது என்று தான கூறவேண்டும். VTL மற்றும் NON VTL சேவைகளை பல நாட்களாக நடப்பில் இருந்துவரும்போதும் இரண்டிற்குமான வித்யாசம் இன்னும் பலரால் சரிவர புரிந்துகொள்ளாததாகவே உள்ளது.

சென்னை – சிங்கப்பூர் VTL சேவை (ஏர் இந்தியா)

தற்போது ஏர் இந்தியா நிறுவனம் வரும் மார்ச் 27ம் தேதி முதல் சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே VTL விமானங்களை இயக்கவுள்ளது. ஆகவே இனி அந்நிறுவனம் வழங்கி வந்த NON-VTL சேவைகள் மூலம் சென்னையில் இருந்து சிங்கப்பூர் வர முடியாது. ஆகவே தற்போது NON-VTL மூலம் சிங்கப்பூர் வர எஞ்சியுள்ள ஒரே வழி திருச்சி விமானநிலையம் மட்டும் தான். திருச்சியில் இருந்து செயல்படும் Air India Express மற்றும் Indigo விமான சேவை நிறுவனங்கள் மட்டுமே தற்போது தமிழகத்தில் இருந்து இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் (NON VTL வழியாக) வர ஒரே வழி.

சரி VTL விமானங்கள் இயக்கப்படுவதால் அனைவருக்கும் நன்மை தானே?

மேலோட்டமாக பார்க்கும்போது VTL சேவை அதிகரிப்பது நல்லது தான், ஆனால் Service மற்றும் Manufacturing என்ற இந்த இரு துறைகளை தவிர வேறு துறைகளை சார்ந்து Work Permit கிடைத்த தொழிலாளர்கள் VTL சேவை மூலம் சிங்கப்பூர் வர முடியாது. சிங்கப்பூர் அரசு பல தளர்வுகளை வழங்கினாலும் இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வர NON VTL சேவைகள் மட்டுமே தொழிலாளர்களுக்கு உதவி வந்தது. ஆகவே இப்பொது இந்த VTL சேவைகளின் அளவு அதிகரித்திருப்பது ஒரு சாராருக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக இருந்தாலும் தொழிலாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் TATA நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். இருப்பினும் தமிழகம் சிங்கப்பூர் ஏர் இந்தியா சேவையில் இன்றளவும் சில குழப்பங்கள் இருந்து தான் வருகின்றது. குறிப்பாக விமான பயணம் ரத்தாகும் நிலையில் அது பயணிகளுக்கு உடனடி தகவலாக அளிக்கப்படுவதில்லை என்பதால் பெரும் குழப்பங்கள் ஏற்படுகின்றது. அதே போல refund கிடைப்பதிலும் பெரிய அளவில் தாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே தொழிலாளர்களுக்கு அதுவும் பேரிடியாக உள்ளது என்றே கூறலாம்.

“வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கணவர்.. நடுரோட்டில் காலைப்பிடித்து கதறும் மனைவி” – கடன் கொடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இருப்பினும் இன்று சிங்கப்பூர் பிரதமர் லீ வெளியிட்ட பல எல்லை கட்டுப்பாடு தளர்வுகள் நிச்சயம் வரும் காலத்தில் இந்த குழப்பங்களுக்கு தீர்வு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts