TamilSaaga

“இட்லியும் சாம்பாரும் சூப்பர்” : சிங்கப்பூர் வந்த கமலா ஹாரிஸ் விரும்பி சாப்பிட்டது என்னென்ன? – ஒரு சுவாரசிய பதிவு

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (ஆகஸ்ட் 22), அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென்கிழக்கு ஆசியாவிற்கான தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தைத் முன்னிட்டு சிங்கப்பூர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் மூன்று நாட்களை கழித்த, முதல் பெண் அமெரிக்க துணை ஜனாதிபதி சிங்கப்பூரில் தனக்கு பிடித்த சில உள்ளூர் உணவு வகைகளை ருசிக்க சிறிது நேரம் ஒதுக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ருசித்த உணவுகள் அனைத்தும் வல்லுனர்கள் மற்றும் சிங்கப்பூர் மக்களால் பரிந்துரைக்கப்பட்டது.

கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வருவதற்கு முன்னதாக, நமது சிங்கப்பூர் அரசின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் வழியாக கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலம் சிங்கப்பூர் திருமதி ஹாரிஸுக்கு எந்த உள்ளூர் உணவை பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இணையத்தில் பலர் சிங்கப்பூரின் சிறந்த உணவுகளை கமெண்ட்களில் பதிவிட்டனர். இந்நிலையில் அந்த பதில்களுக்கு நன்றி கூறி சிங்கப்பூர் வந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு ரோஜாக், லக்ஸா, சாம்பாருடன் இட்லி மற்றும் தே தாரிக் உள்ளிட்ட பன்முக கலாச்சார மதிய உணவு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தனது மத்திய உணவிற்கு பிறகு, டாக்டர் பாலகிருஷ்ணனிடம் பேசிய கமலா ஹாரிஸ், தனக்கு பிடித்த தென்னிந்திய உணவான சாம்பார் இட்லி உட்பட அனைத்து உணவுகளையும் மிகவும் ரசித்ததாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts