TamilSaaga

சிங்கப்பூரில் 38,000க்கும் அதிகமான குத்தகைதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள் – வெளியான நற்செய்தி

சிங்கப்பூரில் 38,400க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் மற்றும் உரிமையாளர்கள், வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) முதல் சமீபத்திய இறுக்கமான பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள அரசிடமிருந்து நேரடியாக நிதி பெறுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்.

அவர் வெளியிட்ட பதிவில் “சிங்கப்பூரில் சில தினங்களுக்கு முன்பு 2 -வது கட்ட கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உதவும் ஆதரவு நடவடிக்கைகளை குறித்து நான் முன்னதாக அறிவித்திருந்தேன். இதில் எங்கள் SMEகள் மற்றும் தகுதியுள்ள இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான வாடகை ஆதரவு அடங்கும்” என்று அவர் கூறினார்.

“இந்நிலையில் 38,400 தகுதியுள்ள குத்தகைதாரர்கள் மற்றும் உரிமையாளர் தங்கள் வாடகை ஆதரவு திட்டத்தின் கொடுப்பனவுகளை ஆகஸ்ட் 6 முதல் பெறுவார்கள் என்றும் இது குறிப்பிட்டதைவிட இரண்டு வாரங்களுக்கு முன்பே அளிக்கப்படுகிறது” என்றும் அந்த பதிவில் கூறினார். இந்த ஊதியம் மே 14 முதல் மே 29 வரை 0.5 மாத வாடகைக்கு சமமாக இருக்கும். மொத்தத்தில், தகுதியான குத்தகைதாரர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் 216 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்படும். மேலும் இதன் இரண்டாம் தவணை அக்டோபரில் வழங்கப்படும்.

இந்த வாடகை நிவாரணம் இந்த கட்டுப்பாடுகள் உள்ள காலத்தில் உங்கள் பணப்புழக்கத்திற்கு உதவும் என்று நம்புகிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts