TamilSaaga

தனிமைப்படுத்துதல் மையங்களாக செயல்படும் ஹோட்டல்கள் – விளக்கமளித்த தேசிய மேம்பாட்டு அமைச்சகம்

சிங்கப்பூரில் பெருந்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்,தனிமைப்படுத்தும் பணிக்காக பணியாற்றிய ஹோட்டல்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 70க்கும் மேல் இருந்து, இந்நிலையில் நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 4) வெளியான நிலவரப்படி 90க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் புதிதாக இந்த ஹோட்டல்கள் தனிமைப்படுத்தும் மையங்களாக செயல்படுத்தப்படுகின்றன என்று தேசிய மேம்பாட்டு அமைச்சகம் (MND) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல அத்தகைய வசதிகளாக தற்போது எத்தனை ஹோட்டல்கள் சேவை செய்கின்றன என்பதை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

SDFகள் நோட்டீஸ் வழங்கப்பட்ட நாட்டிற்குள் வரும் பயணிகளுக்காக இந்த விடுதிகளைக் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

புதன்கிழமை நிலவரப்படி, சுமார் 14,000 பேர் தனிமைப்படுத்துதலின் கீழ் இருத்துவருகின்றனர், அவர்களில் 5,000 பேர் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் வைக்கப்பட்டனர் என்று சுகாதார அமைச்சகத்தின் (MOH) தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts