TamilSaaga

“பெருந்தொற்று கட்டுப்பாடுகளை தளர்த்தும் வலுவான நிலையில் சிங்கப்பூர்” : வல்லுநர்கள் அறிவிப்பு – ஆனால் NO சொல்லும் WHO

நமது சிங்கப்பூரின் உயர் தடுப்பூசி விகிதம் மற்றும் பூஸ்டர் ஷாட் விகிதங்கள் சில கோவிட்-19 நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான ஒரு வாய்ப்பை நமது நாட்டிற்கு வழங்குகின்றன. குறிப்பாக ஓமிக்ரான் மாறுபாடு, நோயின் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துவதால் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தலாம் என்று பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே போல கட்டுப்பாடு நடவடிக்கைகளை எளிதாக்குவது என்பது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நீக்குவதாக அர்த்தமல்ல, என்றும் அவர்கள் மேலும் கூறினர்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளருடன் தனிமையில் இருந்த பணிப்பெண் – கையும் களவுமாக பிடித்த முதலாளி – சட்டத்தில் இருந்து தப்பித்தது எப்படி?

எவ்வாறாயினும், பல வல்லுநர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. சிலர் வல்லுநர்கள் சமூகத்தின் பாதுகாப்பைக் குறைக்க இன்னும் நேரம் வரவில்லை என்று நினைக்கிறார்கள். நாட்டில் தொடரக்கூடிய தொற்றுகளின் எண்ணிக்கை தளர்வுகளால் அதிகரிக்கக்கூடும் என்றும், பலருக்கு குறைவான அளவிலேயே நோய் பாதிப்பு இருந்தாலும், அது நமது சுகாதார அமைப்பை சீர்குலைக்கும் என்றும் கருதுகின்றனர்.

கோவிட்-19 நடவடிக்கைகளை முன்கூட்டியே தளர்த்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அண்மையில் உலக நாடுகளுக்கு விடுத்த எச்சரிக்கையின் காரணமாக கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து சிங்கப்பூரில் இரு வேறு கருத்து நடப்பில் இருந்து வருகின்றது. கடந்த செவ்வாயன்று (பிப்ரவரி 1), கோவிட் -19 WHOன் தொழில்நுட்ப முன்னணி டாக்டர் மரியா வான் கெர்கோவ், குறைந்த அளவிலான தடுப்பூசிகளைக் கொண்ட நாடுகள் பாதிக்கப்படக்கூடிய மக்களை கடுமையான நோய் அல்லது மரணத்திற்கு ஆபத்தில் ஆழ்த்துவது குறித்து உலக அமைப்பு அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார்.

கோவிட் -19 க்கு எதிரான வெற்றியை நாடுகள் அறிவிப்பது அல்லது நோயை இறுதி நிலையில் இருப்பதாகக் கருதுவதற்கு அவசரமான முடிவு என்று WHO அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். ஆனால் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான அசோசியேட் பேராசிரியர் ஹ்சு லி யாங், சா ஸ்வீ ஹாக் (School Of Public Health), இந்த சமீபத்திய ஆலோசனை சிங்கப்பூருக்கு பொருந்தாது என்று வாதிட்டார். அவர் பேசுகையில் “WHOன் அறிவுரை எங்களுக்குப் பொருந்தாது, ஏனென்றால் சிங்கப்பூரில் நடப்பில் உள்ள எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளை முற்றிலும் அகற்றி, கோவிட்-19-க்கு முந்தைய நிலைக்குத் திரும்ப மாட்டோம் என்று நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றார் அவர்.

வாழ வழியின்றி சிங்கப்பூரில் 79 வயதில் 33 ஆண்டுகளை காட்டில் கழித்த முதியவர் – மீண்டும் நகர வாழ்க்கைக்கு வந்தது எப்படி?

இப்படியாக சிங்கப்பூரில் வல்லுநர்களுக்கு இடையே அமலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஒரு விவாத நிலை தான் தொடர்கின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts