TamilSaaga

S Pass மற்றும் E Pass இரண்டிற்குமான வித்யாசம்! உங்களுக்கான வேலையை தேர்ந்தெடுக்க இது எப்படி உதவும்?

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் சில பாஸ்களை அறிவித்துள்ளது. இந்த பாஸ்களை பெறுவதன் மூலமாக தான் சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் வேலை செய்ய முடியும். ஒரு நிறுவனத்தினர் தங்கள் நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து தகுதி வாய்ந்த தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்றால் இந்த பாஸ்களை பெற்று தான் அவர்களை பணியில் அமர்த்தமுடியும். நிறைய வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தினர் பெற்று தரும் பாஸ் மூலம் வேலைக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் இது போன்ற பாஸ்களின் விவரங்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால், தங்களுடைய வேலையில் அடுத்த கட்ட நகர்வு செய்ய முடியாமல் இருக்கிறது.

இதுபோன்ற சிக்கல்களை நிவர்த்தி செய்ய இந்த பதிவு உங்களுக்கு பயன்படும். இந்த பதிவின் மூலம் எம்பிளாய்மெண்ட் பாஸ்(EP) மற்றும் எஸ் பாஸ்(S Pass) பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக யார் எந்த பாஸ்-ன் மூலம் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரலாம் என்றும், எவ்வளவு காலம் வேலை செய்யலாம், எவ்வாறு அதை புதுப்பிப்பது, எத்தனை ஆண்டுகளுக்கு அதை புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது போன்ற விவரங்களை தாங்கள் அறிந்து கொள்ளலாம்.

முதலில் நாம் S Pass பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வகையான பாஸ் mid-level skilled வெளிநாட்டு தொழிலாளர்களுக்கானது. குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது தொழில்நுட்ப சான்றிதழ்கள் பெற்று அவர்களுடைய துறையில் அனுபவம் பெற்ற தொழிலாளர்கள் எஸ் பாஸ் ( S Pass ) மூலம் சிங்கப்பூருக்கு வரலாம். எஸ் பாஸ் மூலம் வேலைக்கு வருபவர்களுக்கு குறைந்தபட்சம் 3000 SGD ஊதியம் பெற வேண்டும். இந்த எஸ் பாஸ் ( S Pass ), ஒரு தொழிலாளர் அவருடைய தகுதியை MOM -ன் விதிகளுக்கு உட்படும் வரை அனுபவிக்கலாம். எஸ் பாஸ் ( S Pass ) பொதுவாக இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் அதற்கு மேல் நீங்கள் இந்த பாசை பயன்படுத்த வேண்டும் என்றால் மேலும் 3 வருடம் நீட்டிக்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் புதுப்பிக்கவும் ஆவணங்களை சமர்ப்பித்து MOM -ன் அனுமதியை பெற வேண்டும். என்னென்ன மாதிரி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது MOM இணையதளத்தில் தெளிவாகவும் விவரமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தது எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (EP ) பற்றி பார்க்கலாம், இந்த பாஸ் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். தகுதி வாய்ந்த ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற தொழிலாளர்கள் இந்த பாசின் மூலம் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரலாம். இந்த எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (EP ) மூலம் சிங்கப்பூருக்கு வருவோர் ஏதேனும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் தங்களுடைய பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அது மட்டும் அன்றே அவர்களுடைய துறைகளில் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

இந்த எம்பிளாய்மெண்ட் பாஸ் மூலம் வேலைக்கு வருவோருக்கு குறைந்தபட்ச ஊதியமாக 4,500 SGD பெற வேண்டும். எம்ப்ளாய்மெண்ட் பாஸ் (EP) இரண்டு ஆண்டுகள் வரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் அதை புதுப்பிக்க வேண்டும். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அதை புதுப்பிக்க திரும்பவும் நீங்கள் ஆவணங்களை செலுத்தி காத்திருக்க வேண்டும். உங்களுடைய பாஸ் புதுப்பிக்கப்பட்ட பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீங்கள் சிங்கப்பூரில் தங்கி பணிபுரியலாம்.

Related posts