TamilSaaga

“ஆசிரியை முன்பைப்போல அக்கறையாக இல்லை” : சிங்கப்பூரில் ஆசிரியையின் Up-Skirt புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட மாணவன்

சிங்கப்பூரில் தனது பள்ளி ஆசிரியை தன்னிடம் முன்பைப் போல் அக்கறை காட்டவில்லை என எண்ணி கோபமடைந்த ஒரு பதின்வயது மாணவன், அந்தப் பெண்ணின் சில Up-skirt புகைப்படங்களை (ஆசிரியருக்கு தெரியாமல் எடுத்த புகைப்படங்கள்) மைக்ரோ பிளாக்கிங் இணையதளமான Tumblr-ல் பதிவேற்றியுள்ளான். தற்போது 17 வயதாகும் அந்த சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) இணையதளம் மூலம் ஆபாசமான பொருளை பரப்பிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டான். இதே போன்ற மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் அவனது தண்டனையில் பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : துபாய் நாட்டை “தட்டி தூக்கி” முன்னிலைக்கு வந்தது சிங்கப்பூர்

குற்றம்சாட்டப்பட்ட அந்த சிறுவன் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால் அவரைப் பெயரிட முடியாது, மேலும் சிங்கப்பூர் சட்டப்படி பாதிக்கப்பட்டவரின் அடையாளம் GAG ஆர்டரால் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 2019 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த குற்றச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் அமர்ந்திருக்கும் சமயத்தில் கீழிருந்து எடுக்கப்பட்ட இரண்டு வீடியோக்கள் இருந்துள்ளன. அந்த வீடியோக்களின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து தனக்கு அனுப்புமாறு பள்ளித் தோழர்கள் இருவரைக் அந்த குற்றம்சாட்டப்பட்ட மாணவன் கேட்டுள்ளான்.

அப்ஸ்கர்ட் ஸ்கிரீன் ஷாட்களைப் பெற்ற பிறகு, அந்த சிறுவன் அந்த புகைப்படங்களைத் எடிட் செய்து பல மாறுதல்களை உருவாக்கி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளான். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், கடந்த மே 21, 2019 அன்று தனது புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில், நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று நீதிபதி கேட்டபோது, ​​சிறுவன் கூறியது : “நான் என் செயல்களுக்கு வருந்துகிறேன், நான் உண்மையில் அந்த நேரத்தில் இருந்து நிறைய அனுபவித்தேன், இடைநீக்கம் செய்யப்பட்டேன், பிரம்பால் அடிக்கப்பட்டேன், எல்லாவற்றையும் அனுபவித்தேன்” என்று கூறினான். தான் இப்பொது திருந்திவிட்டதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து இந்த வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts