TamilSaaga

வயதோ 92… சிங்கப்பூரில் வெறும் 5 வெள்ளிக்கு சாப்பாடு – கையெடுத்து கும்பிட வைக்கும் மூதாட்டி!

சிங்கப்பூரில் Central Business District பகுதி மக்களின் விருப்பமான ஒன்று என்றால் அது Nam Seng Noodle House தான். இந்த உணவகம் Toa Payoh Northல் உள்ள 600 இருக்கைகள் கொண்ட Industrial Estate Coffee கடையான Che Kitchenல் மீண்டும் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.

ஆம்! அந்த கடை மூடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, Nam Seng Wanton Noodle ஆக அது தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 1958ல் தனது ஸ்டாலைத் தொடங்கிய 92 வயதான லியோங் யுயெட் மெங்கின், சிங்கப்பூரின் மிகப் பழமையான வணிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். ஆண்களுக்கு நிகரான ஒரு பெண் முதலாளியாகவும் போற்றப்படுகிறார் இந்த சிங்கப் பெண். இரண்டு ஆண்டு ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் தனது பணிக்கு திரும்பியுள்ள லியோங், வயது மூப்பு காரணமாக அவரால் இனி சமையல் செய்யமுடியாது என்ற போதும், மற்ற ஸ்டால் உதவியாளர்களை மேற்பார்வையிடும் வேலைகளை அவர் செய்யவுள்ளார்.

ஆர்டர்களை எடுப்பது, கடைக்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்குவது என்று கூடுதல் பணிகளையும் அவர் மேற்கொள்ளவுள்ளார். தொற்றுநோய் பரவியதன் காரணமாக தனது CBD ஸ்டால் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தால் அது கடந்த 2020ம் ஆண்டு மூடப்பட்டதாக லியோங் முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது. முன்பு Far East Square பகுதியில் செயல்பட்டு வந்த அந்த கடையில் “குத்தகை பிரச்சினை” இருந்ததையும் அவர் மேற்கோள்காட்டினார்.

அவருடைய Wanton Noodle ரசிகர்களுக்கு அவர் மீண்டும் கடையை திறந்திருப்பது பெருமகிழ்ச்சி அளித்துள்ளது. அதேபோல இப்போதும் அவருடைய கடையில் Wanton Noodle 5 வெள்ளி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. Che Kitchen, 1008A Toa Payoh North, Singapore 318998 என்ற முகவரியில் பாட்டியின் கடை தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts