TamilSaaga

“சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை கோரும் PMEன் 9 அம்ச கோரிக்கைகள்” : ஒரு பார்வை

செயல் திட்டமிடுதல் கட்டளையிடும் தலைமைப் பொறுப்புகள் போன்ற வேலைகளில் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை குறைத்துக்கொண்டு சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது போன்ற ஒன்பது அம்சங்கள் கோரிக்கையை சிங்கப்பூரின் PME அக்டோபர் 20 அன்று அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

PME – Professionals, Managers, Executives.
சிங்கப்பூரின் கட்டளைத் தலைமை செயல்பாடு சார்ந்த பணிகளின் வல்லுனர்கள் இணைந்து அவர்களுக்காக, அவர்களது நலன்கள் மற்றும் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட

ஒரு பணிக்குழு ,அமைப்பு .

இந்த அமைப்பு ஏறக்குறைய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் வல்லுனர்கள், வணிக, தொழிற்சங்க தலைவர்களோடு ஆகஸ்ட் மாதம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு மற்றும் கலந்துரையாடலை தொடர்ந்து அதன் முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை கோரிக்கையாக அரசுக்கு முன் மொழிந்து, அதுபற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருக்கின்றது.

NTUC – The National Trades Union Congress- தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும்,
SNEF – Singapore National Employers Federation – சிங்கப்பூர் தேசிய வேலை கொடுப்போர் கூட்டமைப்பு இரண்டும் சேர்ந்து வெளியிட்டிருக்கிற

அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது-

தொழில் வல்லுனர்கள், செயல் கட்டளையிடும் பணிகள், மேலாண்மை பணிகள், போன்றவற்றில் சிங்கப்பூர்களுக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அதுபோன்ற பணிகளில் வெளிநாட்டினரை அமர்த்துவதற்கு முன்னதாக நிறுவனங்கள் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் .

இதுபோன்ற மேலாண்மைப் பணிகளில் இருக்கிறவர்கள் தங்கள் பணிகளை இழக்கும் பொழுது அது உண்மையிலேயே மிகவும் அச்சுறுத்தலுக்கு உரிய ஒன்றாகவே இருக்கிறது.

நிறுவனங்கள், மேலாண்மை சார்ந்த பணிகளில் வெளிநாட்டினரை அமர்த்துவதற்கு முன்பாக, அந்தப் பணிக்கு தகுதியான சிங்கப்பூரர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு முதல் உரிமை தரவேண்டும். அப்படி அந்த பணிகளுக்கு தகுந்த சிங்கப்பூரர்கள் இல்லை என்றால், வெளிநாட்டு பணியாளரை பணிக்கு அமர்த்தி, அவர் வழியாகவே அந்த பணிக்கு திறமையான சிங்கப்பூரர்களை உருவாக்க வேண்டும், போன்றவை அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன.

NTUC – இன் உதவி பொதுச்செயலாளரும் ,PME பணிக்குழுவின் இணை தலைவருமான திரு. ட்டேய் அவர்கள் குறிப்பிடும்பொழுது,

நிறுவனங்கள் வெளிநாட்டு நிபுணர்களை பணிக்கு அமர்த்தும் பொழுது ஊதியம் கல்வித்தகுதி இவைகளையும் தாண்டி உண்மையிலேயே அந்த நிறுவனத்திற்கு தேவையான தொழில் நிபுணர்கள் குறைவு படுகிறார்களா? என்பதை நாம் கவனிக்க வேண்டும். அப்படி தேவைப்படும் நிபுணர்கள் குறைந்தாலும் அவர்கள் வெளிநாட்டு நிபுணர்களை தொடர்ந்து பணிக்கு அமைத்தும்போது, உள்நாட்டு மேலாண்மை பணி சார்ந்த பணியாளர்களுக்கு, அவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு எப்படி வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்க முடியும் !?

கல்வி, ஆரோக்கியம், மனிதவளம் போன்ற துறைகளில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை

கொடுக்கப்பட வேண்டும். ஏறக்குறைய 90 சதவீத மனிதவள பணிகளில் சிங்கப்பூரர்கள் தான் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள NTUC இன் பொதுச்செயலாளரும், PME பணிக்குழுவின் ஆலோசகருமான திரு. நிங் சீ மெங் அவர்கள், சிங்கப்பூரர்களும் பணி செய்யக்கூடிய பணி வாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்பு அனுமதிச்சீட்டு குறித்த ( E-Pass ) விண்ணப்ப மதிப்பாய்வு செயல்முறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டினர் மட்டுமே பணிபுரியக்கூடிய பணி வாய்ப்புகளில் அவை எளிதாக்கப் படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் உள்ளூர் மேலாண்மை தொழில் சார்ந்த பணியாளர்கள் வெளிநாட்டினரின் வரவினால் அதிக அழுத்தத்தையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே அவர்களுக்கான நிலையான பணிச் சூழலை அமைத்து தர வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக இந்த கருத்துக் கணிப்புகள், மற்றும் ஆய்வுகளிலிருந்து பணி பாதுகாப்பின்மை, உள்ளூர் பணியாளர்களை பணி அமர்த்துவது, அதற்கான தரம் உயர்த்தும் பயிற்சிகளை கொடுப்பது போன்றவற்றில் PME அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பது தெளிவாகி இருப்பதாகவும், இதுபோன்ற அதிக பாதுகாப்பற்ற பணிச் சூழலை 40 முதல் 60 வயது

வரை உள்ள மேலாண்மை தொழில் சார்ந்த பணியாளர்கள் தான் அதிகம் சந்திக்கிறார்கள் என்பதையும் அறிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

Related posts