சிங்கப்பூரில் பாலூட்டும் தாய்மார்களுக்கு என்று பிரத்தியேகமாக ஐந்து பாலூட்டும் நிலையங்கள் ஆறு மாத சோதனைக்காக சென்டோசா முழுவதும் இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) நிறுவப்பட்டுள்ளது. உள்ளூர் Start-Up நிறுவனமான Go! Mama இந்த நிலையங்களை வடிவமைத்துள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் நின்றுகொண்டு பாலூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இலவச நிலையம் “சுத்தமான, தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான சூழலை” வழங்குகிறது என்று அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான விவியன் லீ கூறினார்.
இதையும் படியுங்கள் : தடைகள் பல தாண்டி சாதித்த தமிழன் ராமமூர்த்தி
சோதனையின் ஒரு பகுதியாக, சென்டோசா எக்ஸ்பிரஸில் (ரிசார்ட்ஸ் வேர்ல்ட் ஸ்டேஷன்) இரண்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பீச் ஸ்டேஷன் பஸ் இன்டர்சேஞ்ச், சிலோசோ பீச் மற்றும் பலவான் பீச் ஆகிய இடங்களில் தலா ஒரு POD அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிலையங்களை பயன்படுத்த, பயனர்கள் Go!Mama செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த செயலி தற்போது எந்தத்த பாலூட்டும் நிலையங்கள் இன்னொருவரால் பயன்படுத்தப்படாமல் உள்ளது என்பதை காட்டும். மேலும் அவை எங்கு உள்ளன என்பதைச் சரிபார்க்க அனுமதிக்கும். சிங்கப்பூரில் பாலூட்டும் இடங்களின் பட்டியலையும் இந்த செயலி வழங்குகிறது. அவ்வாறு அவர்கள் நிலையத்தை கண்டறிந்ததும் SingPass மூலம் பயனரின் சுயவிவரம் சரிபார்க்கப்பட்ட பிறகு, POD-களை அணுக அவர்களுக்கு PIN வழங்கப்படும்.
மேலும் PODகளை எளிதாக சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று Go!Mama ஒரு ஊடக வெளியீட்டில் கூறியது. கூடுதலாக ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு UV கிருமி நீக்கம் செயல்முறை தூண்டப்படுகிறது. அதேபோல சோதனையின் போது, துப்புரவு பணியாளர்கள் POD-களை “வழக்கமான சுத்தம்” செய்வார்கள்.