சிங்கப்பூரில் கடந்த மூன்று முறையும் வெகு விமர்சையாக நடந்த தொடர்ச்சியான டோட்டோ டிராக்களில் குரூப் 1 பரிசு வென்றவர்கள் யாருமே இல்லாததால், முதல் பரிசு இப்போது சுமார் S$8 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பெரிய தொகை தற்போது சிங்கப்பூரில் உள்ள பலரை ToToவில் பங்கேற்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே கூறலாம்.
பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வெற்றியாளர்களுக்கு பற்றாக்குறை இருக்கும் என்று அர்த்தமல்ல. அதிக பந்தயக்காரர்கள் ஒரே டிராவில் பந்தயம் வைப்பதன் விளைவாக, அதிகப் பேர் உண்மையில் சிறந்த பரிசை வெல்வதற்கான வாய்ப்பு உயர்கிறது.
கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி அன்று நான்கு குரூப் 1 வெற்றியாளர்கள் S$11,671,952 ஐப் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த S$8 மில்லியன் டிரா இன்று ஜூலை 14, வியாழன் இரவு 9:30 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.