சிங்கப்பூரில் 60 வயதுடைய ஒரு நபர் தனது கிங் ஜார்ஜ் அவென்யூ குடியிருப்பில் பல ஆண்டுகளாக பொருட்களை பராமரிக்கலாம் பதுக்கி வைத்திருந்த நிலையில், அவரது வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை ஏற்பட்டுள்ளது. இது அவரது அண்டை வீட்டாரையும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. Shin Min Daily News (SMDN) அளித்த தகவலின்படி, கரப்பான் பூச்சிகள் அடிக்கடி அக்கம்பக்கத்தினரின் குடியிருப்புகளுக்குள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட, அக்கம்பக்கத்தினர் அவரது அந்த வீட்டை “கரப்பான் பூச்சி வீடு” என்று அழைக்கும் அளவிற்கு தொல்லை அதிகரித்துள்ளது.
செழிப்பான விண்வெளித் துறையை உருவாக்கும் பாதையில் சிங்கப்பூர் – புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமா?
SMDN உடனான ஒரு நேர்காணலில், அந்த கரப்பான் பூச்சிகள் இருக்கும் வீட்டின் அதே மாடியில் வசிக்கும் ஒரு பக்கத்து வீட்டுக்காரர், மூன்று அறைகள் கொண்ட அந்த கரப்பான் பூச்சி குடியிருப்பில் ஆரம்பத்தில் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்ததாகவும். ஆனால் அதன் பிறகு அந்த மூத்த சகோதரரை மட்டுமே அந்த வீட்டில் பார்த்ததாகக் கூறினார். அவர் சேகரிக்கும் குப்பைகளை ஒரு தள்ளுவண்டியில் வைத்து அந்த வீட்டிற்குள் கொண்டுசெல்வதை அந்த பெண்மணி அடிக்கடி பார்த்துள்ளார். இப்படி அவர் குப்பைகளை பதுக்கி வைப்பதால் கரப்பான் பூச்சிகள் அவரது குடியிருப்பில் இனப்பெருக்கம் செய்து ஒரு கூட்டமே உருவாகியுள்ளது.
SMDN நிருபரிடம் அந்த பெண்மணி மேலும் பேசியபோது, 2017ம் ஆண்டில், அந்த நபர் தனது வீட்டு கழிப்பறையை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, அவர் தனது பிளாட்டின் கதவுகளை திறந்துவைத்துள்ளார். அப்போது தான் அங்கு மூட்டை மூட்டையாக குப்பைகள் குவிந்து கிடப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். அந்த நேரத்தில் அவரது குடியிருப்பில் இருந்து இரண்டு அல்லது மூன்று டிரக் குப்பைகளை தொழிலாளர்கள் அகற்றினர், ஆனால் பிளாட் மீண்டும் இப்பொது குப்பைகளால் நிறைந்துள்ளதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், அவர் தினமும் தனது நடைபாதையை விடாமுயற்சியுடன் சுத்தம் செய்தாலும், அவரது கதவுக்கு வெளியே கரப்பான் பூச்சிகள் எப்போதும் இருக்கும் என்று சோகத்துடன் கூறினார். மேலும் அந்த நபரின் பிளாட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் விவரித்தார். அந்த நபரின் பக்கத்து வீட்டுக்காரர் இறுதியாக ஒரு நாள் கடும் சினம் கொண்டு குடியிருப்புக்கு வெளியே உள்ள தொட்டியில் உள்ள செடிகளில் தெளிக்க புதிய பூச்சிக்கொல்லி பாட்டிலை எடுத்துள்ளார்.
அதன் பிறகு அந்த பூந்தொண்டியின் மீது அவர் பூச்சிக்கொல்லியை தெளிக்க அவர் திடுக்கிடும் வகையில் கரப்பான் பூச்சிகளின் கூட்டம் ஒன்று அங்கிருந்து வெளியேறியுள்ளது. இறுதியில் அதிர்ஷ்டவசமாக, SMDN அளித்த தகவலின்படி, ஜாலான் பெசார் நகர கவுன்சில் அந்த நபரை அவரது பிளாட்டை உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளது. இப்படி எல்லாம் அக்கம்பக்கத்தினர் இருந்தா கொஞ்சம் இல்ல ரொம்பவே சிரமம்தான்.