TamilSaaga
SPass Apply

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ஆசைப்படும் உங்களுக்கு தெரியுமா… SPass Apply செய்ய வெறும் 12000 ரூபாய் தானா? ஆனா லட்சத்தில் கட்டணம் கேட்கும் ஏஜென்ட்கள்?

SPass Apply: சிங்கப்பூரில் வேலைக்காக செல்ல இருக்கும் பலருக்கும் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் தானே. அப்படி ஒரு சம்பளத்தினை ஊழியர்களுக்கு கொடுத்து வருவது தான் SPass. இதை அப்ளே செய்ய காத்திருக்கும் ஆள் நீங்க என்றால் ஒரு சில நிமிடங்கள் இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

SPass Apply செய்ய:

சிங்கப்பூரில் SPassல் வேலைக்கு செல்ல நீங்க நினைத்தால் முதலில் உங்களின் கல்வி தகுதி டிகிரி அல்லது டிப்ளமோ இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களுக்கே SPass கொடுக்கப்படும். இதற்கு அப்ளே செய்யும்போது உங்களின் கல்வி சான்றிதழ் மற்றும் மார்க்‌ஷீட் என அனைத்துமே பரிசோதிக்கப்படும்.

ஏஜென்ட் கட்டணங்கள்:

சிங்கப்பூரில் SPassக்கு அப்ளே செய்யும் போது குறைந்தது கட்டணமாக 4 முதல் 5 லட்சம் வரை கேட்கப்படும். இதற்கு பயந்தே சிலர் வொர்க் பெர்மிட்டில் போகலாமா என்று கூட யோசிப்பார்கள். ஆனால் உங்களுக்குமே தெரியாத ஒரு சில விஷயங்கள் இதில் இருக்கிறது.

சிங்கை மனிதவளத்துறை (MOM) இந்த பாஸ்களுக்கு அப்ளே செய்யும் போதும், அது அப்ரூவ் ஆனபிறகு கொடுக்கப்படும் அடையாள ஆட்டை ஆகியவற்றுக்கான கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருக்கும். சரி அதுக்காக தானே ஏஜென்ட் இவ்வளவு கட்டணமும் கேட்கிறார்கள் என ஆறுதல் அடைந்து கொண்டால் ஒரு நிமிஷம் பொறுங்கள்.

MOM விதிப்படி SPass Apply செய்யும் போது 105 சிங்கப்பூர் டாலர் மட்டுமே அப்ளிகேஷன் கட்டணமாக வாங்கப்படும். அதன்பின்னர் அப்ரூவ் ஆனபிறகு 100 சிங்கப்பூர் டாலர் கட்ட வேண்டும். இந்த மதிப்பினை கூட்டி பார்க்கும் போது இதன் மொத்த செலவே இந்திய மதிப்பில் 12000த்திற்குள் தான் வருகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..

அதன்பிறகு ஏன் இது லட்சத்தில் கேட்கப்படுகிறது என விசாரித்து பார்க்கும் போது, இந்தியாவில் இருக்கும் ஏஜென்ட் சிங்கப்பூரில் ஒரு அதிகாரப்பூர்வ ஏஜென்ட்டுக்கு கீழ் தான் வேலை செய்வாராம். அதன்பின்னர், அவர்கள் மூலம் கம்பெனி பார்க்கப்பட்டு SPass Apply செய்து தான் ஒரு ஊழியரை வேலைக்கு எடுக்கிறார்கள்.

இருந்தும் சிங்கப்பூரின் விதிப்படி ஒரு ஊழியரின் ஒரு மாதத்தின் சம்பளத்தினை மட்டுமே கட்டணமாக வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருந்தும் இது எதுவும் பலருக்கு தெரிந்ததாக கூட தெரியவில்லை.

இந்த ஏஜென்ட் கட்டணத்திற்கு சிங்கப்பூர் மனிதவளத்துறை முறையாக கட்டணம் அமைத்து கொடுத்து அதன் விசாரிக்கும் பொழுது பலருக்கு இது உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இது புரளும் கோடிக்கணக்கான பணமும் முறையாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரச்னையும் மனிதவளத்துறையின் கையில் தான் இருக்கிறது என்கிறார்கள் வெளிநாட்டு ஊழியர்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts