TamilSaaga

Marina Bay-ல் 1500 ட்ரோன்களால் உருவாக்கப்படும் கண்கவர் டிராகன் ஷோ!! காணத் தயாராகுங்கள்!!

வருகிற பிப்ரவரி 10, 2024 இல் பிறக்கவிருக்கும் சீன புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில், சிங்கப்பூரின் அடையாளமாக திகழும் Marina Bay waterfront இல் 1500 ட்ரோன்களால் உருவாக்கப்படும் பிரம்மாண்ட டிராகன் லைட் ஷோவானது வானில் ஒளியூட்டி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 6, 10, 11, 16, 17 மற்றும் 18 ஆகிய ஆறு நாட்களுக்கு இலவசமாக Marina Bay Sands இல் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த வண்ணமிகு டிராகன் நிகழ்ச்சிக்கு “The Legend of the Dragon Gate“ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சீன நாட்டின் புராண டிராகன் கிங் கதையை வடிவமைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த லைட் ஷோவில் குடும்பம், விடாமுயற்சி, அதிர்ஷ்டம், மற்றும் செழுமைக்கான குறியீடுகள் என்ற பல்வேறு பட்ட கருத்துகளை முன்னிலைப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லைட் ஷோ சீன டிராகன் புத்தாண்டை வரவேற்கும் நல்லதொரு நிகழ்வாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு ட்ரோன் நிகழ்வும் 10 நிமிடங்கள் நடைபெறும் என்றும் டிராகன் ஷோவைத் தொடர்ந்து, “Spectra – A Light & Water Show” என்ற நிகழ்ச்சி இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்கூடவே, பெரிதும் எதிர்பார்ப்புடைய Taylor Swift ன் “The Eras Tour” மற்றும்  Rod Stewart’ ன் “Live in Concert, One Last Time” போன்ற இசை நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த waterfront drone show வை Singapore Tourism Board ( STB), Marina Bay Sands ( MBS) மற்றும் United Overseas Bank ( UOB) ஆகிய மூன்றும் இணைந்து நடத்துகின்றன.

ஹோட்டல் தங்குமிடங்கள், சுற்றுலா தளங்கள், சில்லறை விற்பனை மற்றும் உணவகங்களின் சலுகைகள்
STB, MBS மற்றும் UOB ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஹோட்டல் தங்குமிடங்கள், சுற்றுலாத் தளங்கள், சில்லறை விற்பனை மற்றும் உணவகங்களில் உள்ளூர் மற்றும் சுற்றுலா வாசிகளுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள United Overseas Bank ன் கார்டுதாரர்கள், ட்ரோன் லைட் ஷோவின் முதன்மைக் காட்சியை வழங்கும் MBS, The Fullerton Bay Hotel, மற்றும் Mandarin Oriental Singapore போன்ற ஹோட்டல்களில் சில சிறப்பு சலுகை கட்டணங்களை அனுபவிக்க முடியும்.

Esplanade – Theatres on the Bay, Gardens by the Bay மற்றும் Singapore Flyer போன்ற சுற்றுலா இடங்களும் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன.

CUT by Wolfgang Puck, LAVO, and Spago Dining Room போன்ற சிறப்பு பெற்ற உணவகங்களிலும் சலுகைகள் பெற முடியும்.

Marina Bay க்கு எப்படி செல்லலாம்?

நீங்கள் Downtown or Circle lines மூலமாக எளிதாக Marina Bay க்கு செல்ல முடியும். அதற்கு முதலில் train இல் Bayfront MRT ஸ்டேஷன் க்கு செல்ல வேண்டும் . அங்கிருந்து Marina Bay Sands hotel, The Shoppes at Marina Bay, Gardens by the Bay, and Sands Expo and Convention Centre போன்ற பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்ல இயலும்.

இல்லையெனில், North South (red) line or East West (green line) line வழியாக Raffles Place சென்று Exit J வழியாக 5 நிமிடம் நடந்தும் Marina Bay Waterfront ஐ அடையலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts