TamilSaaga

தினசரி கொரோனா 5000க்கும் அதிகமாகலாம் – அமைச்சர் கன் கிம் யோங் எச்சரிக்கை

சிங்கப்பூரில் தினசரி கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக உயரலாம், ஒவ்வொரு 10 நாட்களுக்கும் சமூக வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கோவிட் -19 பல அமைச்சக பணிக்குழுவின் இணைத் தலைவர் கன் கிம் யோங் நேற்று (அக்.2) சனிக்கிழமை தெரிவித்தார்.

பணிக்குழு செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு கான் “தினசரி வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய பாதையின் அடிப்படையில், சமூகத்தில் வழக்குகள் இப்போது ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இரட்டிப்பாகிறது.

மேலும் போக்கு எவ்வாறு உருவாகும் என்பதைப் பொறுத்து, தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அடுத்த வாரம் 5,000 க்கும் அதிகமாக உயரக்கூடும். எவ்வாறாயினும், பெரும்பான்மையானவர்கள் அறிகுறியற்றவர்களாகவோ அல்லது மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள், அவர்கள் வீட்டிலேயே விரைவாக குணமடையலாம்.” என கூறியுள்ளார்.

தினசரி வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அதிகரிப்பு விகிதம் “சற்று குறைந்துவிட்டதாகத் தெரிகிறது” என்று சுகாதார அமைச்சகம் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“சமூக வழக்குகள் இரட்டிப்பாகும் நேரம் சுமார் 8 நாட்களிலிருந்து சுமார் 10 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது” என்று MOH தெரிவித்துள்ளது.

Related posts