TamilSaaga

BIG BREAKING: அடுத்த 3 மாதத்திற்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடை – வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பூர் நிறுவனத்துக்கு தடை!

SINGAPORE: பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாக, புதிய வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதில் இருந்து சிங்கை நிறுவனம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த 2022ல் மட்டும், பணியிட விபத்தில் சிக்கி, இன்றைய தேதி (செப்.9) வரை மொத்தம் 37 ஊழியர்கள் பலியாகியுள்ளனர். இது கடந்த 2021ம் ஆண்டு பதிவான மொத்த இறப்புகளை விட அதிகம்.

குறிப்பாக, கடந்த 2 மாதங்களில், இரண்டு தமிழக ஊழியர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். அதில், ராஜேந்திரன் எனும் ஊழியரும் அடக்கம். மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையான ராஜேந்திரனின் (வயது 32) மரணம் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் உலுக்கிவிட்டது.

இதையடுத்து, நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்தின் முன்னெடுப்பு காரணமாக, அவரது குடும்பத்துக்கு சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் மூலம் ரூ.18,000 வரை நிதியுதவி கிடைத்தது.

இந்நிலையில், மிக முக்கிய அறிவிப்பை சிங்கப்பூர் மனித வளத்துறை அமைச்சகம் கடந்த செப்.1ம் தேதி வெளியிட்டது. அதன்படி, பாதுகாப்பற்ற சூழல் அல்லது மோசமான risk controls கொண்ட சிங்கை நிறுவனங்கள் புதிய வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவதில் இருந்து 3 மாதத்திற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 1 மற்றும் 15 க்கு இடையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், பாதுகாப்பு காலக்கெடு நடவடிக்கைகளின் பட்டியலை முடிக்கவும் தற்காலிகமாக நிறுவன செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிங்கை மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பணியிடத்துக்கு சென்று, பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பணியிடத்தில் நிலவும் குறைகள் குறித்த புகாரை சென்று கேட்டறிய வேண்டும் என்றும் MOM உத்தரவிட்டது.

மேலும் படிக்க – நானும் மதுரைக்காரி தான்… மீண்டும் ஒரு வெளிநாட்டு மருமகளை வரவேற்ற தமிழகம் – கோயிலுக்கு வந்தவர்கள் சாமியை மறந்து மணமக்களுடன் செல்ஃபி!

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் safety time-out நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், ஒரு மாதம் முதல் 3 மாதத்திற்கு புதிய Pass Holders-களை பணியமர்த்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்தது.

இந்த சூழலில், சிங்கப்பூரில் உள்ள Le Fong Building Services எனும் நிறுவன ஊழியர் ஒருவர் கடந்த செப்.1ம் தேதி பணியிடத்தில் நடந்த விபத்தில் மேலே இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட, தற்போது மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும், பணியிடத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாகவும் கூறி, Le Fong Building Services நிறுவனத்துக்கு அடுத்த 3 மாதத்திற்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை எடுக்க சிங்கை மனிதவளத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

சிங்கப்பூரில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட MOM-ன் புதிய விதிகளின்படி, சிங்கை நிறுவனம் ஒன்றுக்கு புதிய வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த தடை விதிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். இந்த 3 மாத காலத்திற்குள், குறிப்பிட்ட அந்த நிறுவனம், பணியிடத்தில் ஊழியர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts