TamilSaaga

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார் – சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார். 90களின் பிற்பகுதியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்க்கையை நமது சிங்கப்பூரில் இயங்கி வரும் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சவால் சிங்கப்பூர்” என்ற நிகச்சியை 2013ம் ஆண்டு தொடங்கி கடந்த 2018ம் ஆண்டு வரை ஐந்து சீசன்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிரபல சன் நிறுவனத்தில் “சிந்துபாத்” என்ற நாடகத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிரபல இயக்குநராக வெங்கட் பிரபு அவர்களின் சரோஜா திரைப்படம் உள்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த சில நாட்களாக மருத்துவனமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 16ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். வெங்கட் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related posts